நிஷா வெளியேறிய போது ரம்யா செய்த செயல் - 'விஷம்' என்று திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்.

By ·

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் அதில் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமான போட்டியாளர் என்றால் அது நடிகை ரம்யா பாண்டியன் தான் தமிழில் வெளியான ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் நடிகை ரம்யா பாண்டியன் இந்த திரைப் படத்திற்கு தேசிய விருது கூட கிடைத்தது ஆனால் இந்த திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

https://twitter.com/athiraiyan/status/1338179456922337287

தற்போது பிக் பாஸில் விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன் நடுநிலையாக தான் இருந்து வந்தார். மேலும், இவர் எந்த கேங்கையும் சேர்ந்தவர் இல்லை என்று பலரும் கூறி வந்தனர். ஆனால், கடந்த சில நாட்களாகவே இவரது செல்வல்பாடுகள் ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் ரம்யா செய்த ஒரு விஷயம் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து இருந்தது. ஆனால், 12 போட்டியாளர்கள் அப்படியே இருந்தார்கள். 12 பேர் இருந்தும் நிகழ்ச்சியில் சுவாரசியம் கூடவில்லை. அதற்கு முக்கிய காரணமே அர்ச்சனாவின் லவ் பேட் தான். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் 2 எவிகஷன் செய்து லவ் பெட்டின் உறுப்பினர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ்ஷை வெளியேற்றி இருந்தார். அதே போல நேற்றய நிகழ்ச்சியில் நிஷா வெளியேறினார். ஒரே சமயத்தில் தங்களது குரூப்பை சேர்ந்த 2 பேர் வெளியேறியதால் அர்ச்சனா குழு கடும் சோகத்தில் இருந்து வருகிறார்கள்.

https://twitter.com/funscribblings1/status/1338384041284837378

இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களை விட நிஷா வெளியேறியதற்கு முக்கிய காரணம் அர்ச்சனா தான் என்று பலரும் கூறி வருகிறார்கள். நிஷா, பிக்பாஸ் வீட்டில் இருந்த வரை தன்னுடைய விளையாட்டை விளையாட வேண்டும் என்று கமல் அடிக்கடி கூறிக் கொண்டுதான் இருந்தார். ஆனால், கடைசி வரை நிஷா அர்ச்சனா குழுவில் கைப்பாவையாக தான் இருந்தார். என்னதான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தாலும் இவர் பிக் பாஸ் வீட்டில் விளையாடிய விளையாட்டை பிடிக்காமல் தான் மக்கள் இவரை வெளியேற்றினார்கள் தவிர இவர் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு தவறையும் பிக் பாஸ் வீட்டில் செய்தது இல்லை என்பதுதான் பலரின் கருத்து.

https://twitter.com/AceRainbo/status/1338365384420823042

நிஷா வெளியேறிய போது அர்ச்சனா, ரியோ அனைவரும் கண்ணீர் கடலை ஆழ்ந்தனர். அப்போது நிஷா, ரியோவை கட்டி அணைத்து அழுத போது ரம்யா பாண்டியன், பாலாஜியை பார்த்து நமுட்டு சிரிப்பை சிரித்தார். பதிலுக்கு பாலாஜியும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிட்டு வரும் நெட்டிசன்கள் ரம்யா மிகவும் விஷம் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full