இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள ரம்யா பாண்டியனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இருப்பினும் இவரது ஒரு சில செயல்பாட்டினால் இவருக்கு சமூக வலைத்தளத்தில் சில ஹேட்டர்ஸ்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அதிலும் குறிப்பாக சமீபகாலமாக இவர் ஆரியை தொடர்ந்து டார்கெட் செய்து வருவதாக ரசிகர்கள் இவரை சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்த்து வருகிறார்கள். அதிலும் கடந்த சில வாரங்களாகவே மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விட ஆரி என்ன செய்கிறார் என்பதை தான் ரம்யா பாண்டியன் உன்னித்து கவனித்து வருகிறார் என்ற விமர்சனங்கள் வந்தது.

வீடியோவில் 12 நிமிடத்தில் பார்க்கவும்

மேலும் ஆரியிடம் யாராவது சண்டை போட்டால் அவருக்கு ஆதரவாக ரம்யா பாண்டியன் களம் இறங்கி விடுகிறார். இதை கமல் கூட சுட்டிக்காட்டி இருந்தார். இதனாலேயே ரம்யாவை பற்றி ஆரியின் ரசிகர்கள் பலரும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அதே போல சமூக வலைதளத்தில் ஆரிக்கு ஆதரவாக பல்வேறு பிரபலங்களும் ஆதரவாக பேசி வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தொடர்ந்து ஆரிக்கு ஆதரவாக பேசி வருகிறார்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரம்யா பாண்டியனின் அக்கா மற்றும் அவரது தம்பி பேசுகையில், ஒருவருக்கு ஆதரவு தெரிவிக்க ஏன் மற்றவரை அசிங்கப்படுத்துகிறார்கள், இதை ஒரு விளையாட்டாய் பாருங்க, அந்த விளையாட்டில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை வைத்து விமர்சனம் செய்யுங்கள். குறிப்பாக ஜேம்ஸ் வசந்தன், ஆரி இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற போது நாங்கள் அனைவரும் கூட சந்தோசப்பட்டேன்.

ஆனால், அவர் ஆரி ஜெயித்ததை ரம்யா முகத்திற்கு குளோஸ் அப் வைங்க என்று கேலியாக பதிவிட்டுள்ளதை பார்க்கும் போது எனக்கு எப்படி இருக்கும். அதை பார்த்து நானும் என் குடும்பத்தாரும் மிகவும் வருத்தப்பட்டோம். அடுத்த முறை நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி விமரித்தால், நடுநிலையாக இருங்கள், பெண்ணிற்கு மரியாதை கொடுங்க என்று கூறியுள்ளார். மேலும், ஒரு வேலை என் தங்கை பேர் எடுத்தால் தான் இன்னும் பிரபலம் கிடைக்கும் என்று செய்கிறார் என்றால் பண்ண சொல்லுங்க என்றும் கூறி இருந்தனர்.

Advertisement

இதற்கு பேட்டி ஒன்றில் பதிலடி கொடுத்துள்ள ஜேம்ஸ் வசந்தன் ரம்யாவின் தம்பி மற்றும் அக்கா ரம்யாவை ஆதரிப்பது எந்த தவறும் இல்லை. அவர் Freeze Taskன் போது நான் அவரை பார்த்தேன். அவருக்கு என்ன ஒரு என்ன ஒரு 21, 22 வயது இருக்குமா? ஆனால், என்னுடைய அனுபவமே 26 வருடம். அவர் என்னுடைய அனுபவத்தில் இருந்து அவர் எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்க முடியாது. ஆனால், இப்படி ஒரு சில்லியான கருத்தை கூறியுள்ளோம் என்று அவரே ஒரு 5 வருடம் கழித்து புரிந்துகொள்வார். அவர் கற்றுக்கொள்ளட்டும்.இதை ஒரு விவாதமாக ஆக்க வேண்டாம் என்று குறித்துள்ளார்.

Advertisement
Advertisement