எனக்கு நம்பிக்க கிடையாது, நாம என்னைக்கும் உதாரணமா இருக்கனும் - விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை நட்ட ரம்யா பாண்டியன்.

By Rajkumar · 22/4/2021

சனங்களின் கலைஞனாக இருந்த சின்னக் கலைவானர விவேக் கடந்த சில தினங்களுக்கு முன் (ஏப்ரல் 17) காலமான சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

https://twitter.com/_kee_rthi_/status/1385190671967866881

அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. விவேக்கின் உடல் விம்ருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது இதற்கு பலரும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். விவேக் இருந்த போது கிரீன் கலாம் மூலம் 1 கோடி மரங்களை நட வேண்டும் என்பதை ஒரு இலக்காக கொண்டுவந்தார். இதுவரை அவர் 30 லட்சத்துக்கும் மேலான மரங்களை நட்டு இருந்தார்.

இதையும் பாருங்க : சீரியலில் இருந்து விலகுவதாக ரோஜா சீரியல் நடிகர் அறிவிப்பு - காரணம் இது தானாம்.

விவேக் இறந்துவிட்டதால் அவரின் 1 கோடி மரக் கன்று கனவு நிறைவேறதா என்று பலர் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால், விவேக் இறந்த போது பலரும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மரக் கன்றுகளை நட்டனர். அதே போல பல பிரபலங்களும் மரக் கன்றுகளை நட்டு விவேக்கின் 1 கோடி மரக் கனவை நினைவாக்க உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ரம்யா பாண்டியன் விவேக்கின் நினைவாக மரக் கன்றுகளை நட்டுள்ளார்.

https://twitter.com/DivyaMeenu4/status/1385155154089963522

விவேக் மறைவையொட்டி அவர் நினைவாக 59 (விவேக் வயது) மர கன்றுகளை திருவள்ளூர் ஆயுத படை மைதானத்தில்  மாவட்ட SP. அரவிந்தன் மற்றும் காவலர்களும் நட்டு சிறப்புரை ஆற்றினார். விவேக் இருந்த போது நடிகை ரம்யா பாண்டியன், தன்னை பற்றி விவேக் பெருமையாக பேசியதை பகிர்ந்து இருந்தார். ரம்யா பாண்டியன் நடித்த, ஆண் தேவதை படத்தை பார்த்து நடிகர் விவேக், ரம்யா பாண்டியன் போன்றவர்களுக்கு பலர் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full