அதை நான் மனசார ஏத்துக்குறேன் - பிக் பாஸுக்கு பின் ரவீனா போட்ட முதல் பதிவு. இப்படி தான் ஒத்துக்கனும்.

By Rajkumar · 2/1/2024

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 13 வாரங்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

அதிலும் கடந்த வாரம் நடந்த டவுள் ஏவிக்ஷனில் ரவீனா மற்றும் நிக்சன் வெளியேற்றப்பட்டனர். பொதுவாக பிக் பாஸ் என்றாலே விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொள்வார்கள். அந்த வகையில் ரவீனாவும் விஜய் டிவி ப்ராடக்ட் தான். ஜோடி நிகழ்ச்சியில் மணியுடன் சேர்ந்து ஆண்டி ட்ரெண்ட்டான ரவீனா பின்னர் மௌன ராகம் 2 தொடர் மூலம் இல்லத்தரசிகள் மனதில் இடம்பிடித்தார்.

அதிலும் இந்த இளம் வயதிலேயே ஒரு குடும்ப பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார் ரவீனா. இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு பிக் பாஸில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இவரது செயல்கள் ஜெனிலியாவாக தெரிந்தாலும் நாட்கள் செல்ல செல்ல இவர் செய்த சில நாரதர் வேலைகள் இவரது பெயரை டேமேஜ் செய்தது. அதிலும் மணியுடன் சேர்ந்து இவர் செய்த Cringe செயல்கள் பலரை எரிச்சடைய செய்தது.

மேலும், பேமலி ரவுண்டில் இவரது உறவினர் ஒருவர் உள்ளே சென்ற போது இவரையும் மணியையும் வெளுத்து வாங்கினார். ஆனால், அப்போது கூட இவர் மீது எதுவும் தவறு இல்லாதது போல மணியை மட்டுமே குறை சொன்னார். ஆனால், அவர் அவ்வளவு அட்வைஸ் செய்தும் மீண்டும் மணியுடன் தான் சேர்ந்து விளையாடினார் ரவீனா. இவர் 91 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்ததே ஆச்சரியமான ஒரு விஷயம் தான்.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் பதிவிட்டுள்ள அவர் ' முதலாவதாக நான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது எனக்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் முடிந்தவரை இந்த 91 நாட்கள் உங்கள் அனைவரையும் நான் மகிழ்வித்தேன் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சி குறித்து அனுபவத்தை ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இது வாழ்க்கையில் மாற்றம் ஒரு அனுபவமாக தான் எனக்கு இருந்தது.

View this post on Instagram

A post shared by Raveena•🌈🦋 (@im_raveena_daha)

நான் கமல் சாருக்கும், விஜய் டிவிக்கும், எண்டிமால் நிறுவனத்திற்கும் இந்த வாய்ப்பிற்காக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பிக் பாஸ் வீட்டை என்னுடைய சொந்த வீடு போல உணர வைத்த என்னுடைய சக போட்டியாளர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் ஒரு வாழ்க்கை பாடமாக எடுத்துக் கொள்கிறேன். இதன் மூலம் நான் செய்த சில தவறுகளை திருத்திக் கொள்கிறேன். மேலும் உங்களுடைய கருத்துக்களையும் நான் மனசார ஏற்றுக்கொள்கிறேன் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றும் என் மனதிற்கு நெருக்கமான ஒரு விஷயமாகவே இருக்கும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full