கோவிலுக்கு கூட இப்படி தான் போவியா ஜூலி.! ஜூலியின் புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.!

By Rajkumar · 4/6/2019

தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க போராட்டமாக கருதப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத் தமிழச்சி என்று பெயர் எடுத்தவர் ஜூலி. ஆனால், விஜய் தொலைக்காட்சியில் நடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதற்கு பின்னர் இவரது நல்ல பெயர் அனைத்தும் அப்படியே ரிவர்ஸ் ஆகி விட்டது.

https://twitter.com/lianajohn28/status/1135564894349037569

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அரங்கேற்றிய பல நாடகத்தால் இவருக்கு பல ஹீட்டர்ஸ்கள் உருவாகிறார்கள். இவரைப் பற்றிய எந்த செய்திகள் வந்தாலும் இவரை சமூகவலைதளத்தில் வறுத்து எடுத்து வந்தனர் . ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ரியாலிட்டி ஷோ, சினிமா என்று பிஸியாக இருந்து வருகிறார் ஜூலி.

அதேபோல அவரது ஹெட்டர்ஸ்களும் குறைந்தபாடில்லை. இவர், என்ன பதிவிட்டாலும் அதனை கலாப்பதற்கு என்று ஒரு கூட்டம் இருந்து கொண்டு தான் வந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஜூலி சமீபத்தில் 'நான் என்ன தவறு செய்தேன் எதற்காக இப்படி திட்டுகிறீர்கள்' என்று ஒரு வீடியோ ஒன்றை கூட வெளியிட்டு இருந்தா.ர் அந்த வீடியோ சமூக வளையதலத்தில் வைரலாக பரவியது.

https://twitter.com/vimalian_k2/status/1135583513745342464

https://twitter.com/mdjinna001/status/1135572066818768897

https://twitter.com/sureshM53156320/status/1135598746949914624

அதன் பின்னர் கூட ஜூலியை கிண்டலப்பதை மட்டும் ரசிகர்கள் நிறுத்தியபாடில்லை. இந்த நிலையில் ஜூலி கோவிலுக்கு சென்ற புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் கோவிலுக்கு கூடவா மேக்கப்புடன் போவீர்கள் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full