எலிமினேசனுக்கு பின் பிக் பாஸிடம் கண்ணீர் விட்டு மஞ்சரி வைத்த கோரிக்கை - பிக் பாஸ் சொன்ன பதில்

By subhashini · 6/1/2025

மஞ்சரி வைத்த கோரிக்கையை பிக் பாஸ் நிராகரித்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 92 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித், ஜெப்ரி, அன்ஷிதா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

பிக் பாஸ் 8:

நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்குவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டி, சண்டை, சச்சரவு எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். முத்துக்குமரன் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்று விட்டார் என்று சொல்லலாம்.
அதோடு கடந்த 13 வது வாரத்திற்கான நாமினேசனில் தீபக், பவித்ரா, ராணவ், ஜாக்லின், ராயன், அருண், விஷால், மஞ்சரி ஆகியோர் பெயர்கள் இடம்பெற்று இருக்கிறது. இதில் ராணவ், மஞ்சரி வெளியேறி இருந்தார்கள்.

நிகழ்ச்சியில் மஞ்சரி:

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போது மஞ்சரி வைத்த கோரிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்
மஞ்சரி. இவர் இதற்கு முன்பு தமிழ் எங்கள் பேச்சு இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அது மட்டும் இல்லாமல் இவர் நிறைய பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு பேசி இருக்கிறார். அதன் மூலம் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இவர் வைல்ட் கார்ட் என்டிரியாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார்.

மஞ்சரி வைத்த கோரிக்கை:

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து இவர் நன்றாகத் தான் விளையாடி வந்தார். இவரை டப்பான போட்டியாளராக தான் எல்லோருமே பார்த்தார்கள். இவர் டாப் 5ல் வருவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரம் இவர் வெளியேறி இருந்தது பலருக்குமே ஷாக்கிங் தான். மேலும், நிகழ்ச்சியை விட்டு வெளியேறும்போது போட்டியாளருக்கு தொடக்கத்தில் கொடுத்த டிராபியை உடைத்துவிட்டு போகணும். அந்த வகையில் மஞ்சரி, அந்த டிராபியை உடைக்கும் முன் பிக்பாஸிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார்.

பிக் பாஸ் சொன்னது:

அதாவது, நான் பிக் பாஸ் வீட்டில் ஜெயித்து விட்டு வருவதாக என்னுடைய மகனிடம் கூறியிருந்தேன். தற்போது அது நிறைவேறாமல் போனதால் இந்த டிராபியை உடைக்காமல் எடுத்துக்கொண்டு போய் என் மகனிடம் கொடுக்க ஆசைப்படுகிறேன். தயவுசெய்து இதை எடுத்து செல்ல அனுமதி கொடுங்கள் என்று அழுது கொண்டே கேட்டிருக்கிறார். ஆனால், பிக் பாஸ் மனம் இறங்கி அனுமதியும் தரவில்லை. ட்ராபியை உடைக்க சொன்னார். வேறு வழியில்லாமல் கண்ணீர் விட்டு கொண்டு மஞ்சரி அந்த டிராபியை உடைத்து இருக்கிறார். தற்போது இதை தான் நெட்டிசன்கள் விமர்சித்தும், பிக் பாஸ் செயலை கண்டித்தும் வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full