இணையத்தில் பரவிய தன்னுடைய அந்தரங்க வீடியோ, பதறிய குடும்பம் - ரேஷ்மா சொன்ன சம்பவம்.

By Manikandan · 30/12/2022

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ரேஷ்மா. ஆனால், அதற்கு முன்பாகவே இவர் “புஷ்பா புருஷன்” என்ற முன்பாகவே மூலம் இளைஞர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருந்தார். இவர் ஒரு விமான பணிப் பெண்ணாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கி இருந்தார். பிறகு தான் நடிகை ரேஷ்மா அவர்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக மீடியாவிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆரம்பத்தில் இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து இருக்கிறார்.

அதன் பின்னர் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வாணி ராணி’ தொடர் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் வம்சம், மரகத வீனை, அதன் நிலவு போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் செய்தி வாசிப்பாளராகவும் பணி புரிந்து இருக்கிறார். அதேபோல் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘மசாலா படம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

நடித்த படங்கள் :

அதைத் தொடர்ந்து இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற வந்துட்டா நடித்து இருந்தார். முதல் படத்திலேயே ‘புஷ்பா புருஷன்’ காமெடி மூலம் மக்களிடையே நல்ல பெயரை பெற்று இருந்தார் ரேஷ்மா. இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

நடிக்கும் சீரியல்கள் :

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. அதன் பின் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பின் ‘அன்பே வா’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பின் திடீரென்று இந்த சீரியலில் இருந்து ரேஷ்மா விலகிவிட்டார். இவருக்கு பதிலாக பிரசாந்த் பட நடிகை வினோதினி நடித்து வருகிறார். அதன் பின் நடிகை ரேஷ்மா விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

போலியான தகவல் :

இப்படி சின்னத்திரையிலும் வெள்ளித்திரையில் பிஸியாக இருந்து வரும் 39 வயதாகும் நடிகை ரேஷ்மா ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் பழனியப்பன் தொகுத்து வழங்கும் "தமிழா தமிழா" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அதில் அவர் கூறியதாவது ஒரு சமயம் "ரேஷ்மா பசுபுலேட்டி ஹாட் லீக் வீடியோ" என்று ஒரு போலியான செய்தி இணையத்தில் வலம் வந்தது. இதனை பார்த்த என்னுடைய சகோதரி எனக்கு போன் செய்து இந்த தகவலை கூறினார்.

அந்த சமயத்தில் நான் வெளிநாட்டில் இருந்தேன். என்னுடைய குடும்பம் திரைத்துறையில் இருந்ததினால் இந்த விஷயம் பற்றி அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. இருந்தாலும் இந்த விஷயம் ஒரு சாதாரண பெண்ணிற்கு நடனந்திருந்தால் என்ன நடந்திருக்கும் நினைத்து பாருங்கள், அவர் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பார் என்று "தமிழா தமிழா" நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேஷ்மா கூறியிருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full