ரியோ பொண்ணா இது ? அதுக்குள்ள எப்படி வளந்துட்டார் பாருங்க. அவரே பகிர்ந்த புகைப்படம்.

By Rajkumar · 17/10/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர்.

இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.மற்ற சீசன்களைவிட இந்த சீசனில் தான் எக்கசக்க விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதிலும் ஷிவானி, ஆஜீத் ஆகியோரை எல்லாம் பொத்தி பொத்தி காப்பற்றியது பிக் பாஸ். இதில் ரியோவை பற்றி சொல்லவா வேண்டும்.

இதையும் பாருங்க : மாலத்தீவில் ஹனி மூன் - நீச்சல் உடையில் வீடியோ வெளியிட்ட வித்யு லேகா.

அதிலும் பிக் பாஸின் கடைசி வாரம் பல்வேறு விஜய் டிவி பிரபலங்களும் ரியோ கடைசி வார நாமினேஷனில் இருந்த போது அவரை இறுதி போட்டிக்கு அனுப்ப பல்வேறு விஜய் டிவி பிரபலங்களும் சமூக வலைதளத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார்கள்.பலரும் ரியோவிற்கு 50 வாக்குகளை அளித்த ஸ்க்ரீன் ஷாட்டை கூட தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். ஆனாலும் ரியோவால் டாப் இரண்டு இடத்தை பிடிக்க முடியவில்லை.

தன் மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்தில்

நடிகர் ரியோ, கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி ஆம் தேதி, ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இந்த தம்பதிக்கு ஒரு மகளும் பிறந்தனர். தன் மகளுக்கு ரியோ + ஸ்ருதி என்ற இரண்டு பெயரையும் கலந்து ரித்தி என்று பெயர் வைத்தனர். கடந்த மார்ச் மாதம் தான் தன் மகளின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர். தற்போது தன் ஒன்றரை வயது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full