பிக் பாஸ் "Title Winner" இவர்தான்..! அதிகாரப்பூர்வமாக வெளிவந்த தகவல்.!

By Ajju · 30/9/2018
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது இறுதி போட்டிக்கும் ஜனனி, ரித்விகா, விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யா ஆகியோர் முன்னேறியிருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஜனனி வெளியேறி இருந்த நிலையில் மீதமுள்ள ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி ஆகியோரில் யார் பிக் பாஸ் பட்டத்தை வெல்ல போகிறார்கள் என்ற அறிவிப்பை இன்று பிரமாண்டனாக அறிவிக்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் சீசன் வின்னர் யார் என்பதற்காக கடந்த ஞாயிற்றுகிழமையே வாக்களிப்புகள் துவங்கி விட்டது. படு மும்மரமாக நடந்து வரும் வாக்களிப்பில் யாருக்கு மக்களின் ஆதரவு அதிகம் உள்ளது என்ற தகவல் தகவலை விஜய் தொலைக்காட்சியிலேயே அடிக்கடி வெளியிட்டு வந்தனர். ஆனால், கடந்த வெள்ளிக்கிழமையுடன் யாருக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்ற தகவலைவெளியிடுவதை நிறுத்தி விட்டனர். சமீபத்தில் கிடைத்த தகவலின்படி ரித்விகாவிற்கு தான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதே போல கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த வாக்களிப்பில் ரித்விகாவிற்கு இதுவரை 1 கோடிக்கும் அதிமாக வாக்குகள் பதிவாகியுள்ளது. ரித்விகாவிற்கு அடுத்தபடியாக ஐஸ்வர்யாவிற்கு 70 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2வின் வின்னர் ரித்விகா என்பதில் எந்த வித ஐயமும் இல்லாமல் இருக்கிறது. தற்போது நமக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி ரித்விகா பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 பட்டத்தை தட்டிச்சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பம் முதலே மிகவும் உஷாராக விளையாடி வந்த ரித்விகா இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்தார். இவரது நிதானமான ஆட்டத்தாலும் தனது சாதுவான குணத்தால் ரசிகர்களின் பேராதரவை பெற்று சீசன் 2 நிகழ்ச்சியின் பட்டத்தை வென்றுள்ளார் ரித்விகா. ஜனனி ஐயர் நேற்றே வெளியேறிய நிலையில் அவரை அடுத்து விஜயலக்ஷ்மி வெளியேறியதாக சில தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 2 வில் ரித்விகா வின்னராகவும், ஐஸ்வர்யா ரன்னராகவும் இன்று அறிவிக்கப்படவுள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full