பிக் பாஸ் ரித்விகாவுக்கு நிச்சயதார்த்தம் - மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

By subhashini · 14/7/2025

பிக் பாஸ் ரித்விகாவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பெரிய அளவு பிரபலமானவர் நடிகை ரித்விகா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் பாலா இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த ‘பரதேசி’ என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் மெட்ராஸ் படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த துணை நடிகை என்பதற்கான விருதையும் பெற்றார்.

அதன் பின்னர் தொடர்ச்சியாக இவர் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் இவருக்கு 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகா சிறப்பாக விளையாடி டைட்டில் வின்னரும் ஆனார். அதன் பின் இவர் சில படங்களில் நடித்தார். அந்த வகையில் இவர் கடைசி உலகப் போரின் கடைசி குண்டு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

ரித்விகா குறித்த தகவல்:

அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி கோப்பையை தட்டிச் சென்றதால் இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி ஹீரோயினாக இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும், இவர் விடாமுயற்சியுடன் போராடி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் தீபாவளி போனஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜெயபால் என்பவர் இயக்கி இருந்தார்.

ரித்விகா படங்கள்:

சாதாரண மக்களின் போராட்டங்களையும், தீபாவளி போன்ற பண்டிகைகள் போது அவர்கள் படும் துன்பங்களையும் வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டது. இதை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு நவீன் சந்திரா நடிப்பில் லோகேஷ் எச் இயக்கத்தில் வெளியாகி இருந்த 11 படத்தில் ரித்விகா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் செய்திருக்கிறது. இதை எடுத்து சமீபத்தில் அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியாகி இருந்த டிஎன்ஏ படத்தில் ரித்விகா நடித்திருந்தார்.

ரித்விகா நிச்சயதார்த்தம்:

இந்த படமுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதை அடுத்து இவர் ராதிகா இயக்கத்தில் தி புரூப், பரமன் இயக்கத்தில் பப்ளிக் போன்ற படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அதோடு சில வெப் தொடரிலும் ரித்விகா நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை ரித்விகா சந்தோசமான செய்தியை அறிவித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாப்பிள்ளை விவரம்:

அதாவது, நடிகை ரித்விகாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கிறது. இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பர் வினோத் லக்ஷ்மனை தான் திருமணம் செய்ய இருக்கிறார். இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள், நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்கள். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதோடு திருமணம் எப்போது என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full