என்னை தமிழ் மக்கள் மன்னியுங்கள்.! சர்ச்சை கருத்திற்கு ட்விட்டரில் கெஞ்சிய சாக்க்ஷி.!

By Rajkumar · 8/9/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தர்ஷன் விஷயத்தில் வனிதா மற்றும் ஷெரின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது தர்ஷனுக்கு வெளியில் காதலி இருப்பது தெரிந்தும் நீ அவனிடம் நெருக்கமாக இருந்தால் அதற்கு கள்ளத்தொடர்பு என்றுதான் பெயர் என்று ஷெரினிடம் வனிதா பேசியிருந்தார் இதனால் ஷெரின்,வனிதா மீது கடும் கோபம் கொண்டார்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் ஷெரினை ஆசுவாசப்படுத்திய சாக்க்ஷி, வனிதா உன் நல்லதுக்காக தான் சொல்கிறார் என்றும் வெளியில் இருப்பவர்கள் ஆயிரம் சொல்வார்கள் ரோட்டில் நாய் குறைத்தால் அதை எல்லாம் நீ கண்டு கொள்ளாதே என்று மக்களை மிகவும் கேவலமாக பேசி இருந்தார் சாக்க்ஷி. சாக்க்ஷி மீது ரசிகர்கள் பெரும் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும், சமூக வலைதளத்திலும் சாட்சியை வறுத்து எடுத்து வந்தனர்.

இதையும் பாருங்க : லாஸ்லியாவின் காதலர் இவரா ? கையில் லாஸ்லியா முகத்தை பச்சையே குத்தி இருகாரே.!

நேற்றய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இது குறித்து கமல் கேட்ட போது, நான் மக்களை அப்படி கூறவே இல்லை. மொழி பிரச்னையால் நான் சொல்ல வந்த கருத்து வேறு விதமாக பிரதிபலித்து இருக்கலாம், எனக்கென்று ஒரு பொறுப்பு இருக்கிறது அதனை நான் மதிக்கிறேன் என்று சாக்க்ஷி விளக்கமளித்திருந்தார்.

https://twitter.com/ssakshiagarwal/status/1170674669122289667

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாக்க்ஷி, ட்விட்டரில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அதில், எனது வார்த்தைகள் உங்கள் உணர்வை புண்படுத்திய இருக்கலாம் என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன். அதற்காக நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது அறிக்கை பார்வையாளர்களை பொதுமை படுத்துவதாக இல்லை இது ஷெரினை ஆறுதல்படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான பழமொழி.

உங்கள் அனைவரையும் புண்படுத்தும் நோக்கமல்ல. எதிர்காலத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன் என்று அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் எனக்கு எப்போதும் கிடைத்த அன்பு, ஆதரவு மற்றும் கருத்தை நான் மதிக்கிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன். நீங்கள் என் குடும்பத்தை போன்றவர்கள் அதனால் நான் தற்செயலாக தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து எனக்கு ஆதரவளிக்கும். அன்புடன் சாக்ஷி அகர்வால் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full