காப்பாற்ற சாக்க்ஷி.! இந்த வாரம் வெளியேறியது இவர் தான்.! செம ட்விஸ்ட் போங்க.!

By Rajkumar · 4/8/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது வரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன் என்று 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மேலும், 6வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கியுள்ளது. இந்த வார தலைவர் தர்ஷனை தவிர மற்ற போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றனர்.

மேலும், இந்த வார நாமினேஷன் லிஸ்டில் சாக்க்ஷி, கவின், அபிராமி, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்னர். இந்த வாரம் சாக்க்ஷி தான் வெளியேறுவார் என்று பலரும் எண்ணி வரும் நிலையில் தற்போது வியப்பூட்டும் திருப்பங்கள் நடந்து வருகிறது.

இந்த வார ஆரம்பத்தில் சாக்க்ஷிக்கு குறைவான வாக்குகள் பதிவாகி கடைசி இடத்தில் இருந்தார். ஆனால், இரண்டு நாட்களாக சாக்க்ஷிக்கு அதிகப்படியான வாக்குகள் வர தற்போது மூன்றாவது இடத்தில் இருந்து வந்துள்ளார் சாக்க்ஷி. எனவே, இறுதி நேரத்தில் ரேஷ்மாவிற்கும் அபிராமிக்கு தான் கடுமையான போட்டி நிலவிவந்தது.

ஆனால், கவின் மற்றும் லாஸ்லியா விஷயத்தில் சாக்க்ஷி கொஞ்சம் ஓவராக ரியாக்ட் பண்ணியதால் மீண்டும் சாக்க்ஷி ஆதரவு குறைந்துவந்தது. வெள்ளிக்கிழமை வரை மூன்றாவது இடத்தில் இருந்த சாக்க்ஷி தற்போது இறுதி இறுதி நேரத்தில் காப்பாற்றபட்டுள்ளார். இதனால் ரேஷ்மா வெளியேற்றபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full