குடித்துவிட்டு விபத்தை ஏற்படுத்திய சக்தி.! போதையில் தள்ளாடி கீழே விழும் வீடியோ வெளியானது.!

By Rajkumar · 9/1/2019

பிரபல இயக்குனர் பி வாசுவின் மகனும் நடிகருமான சக்தி சின்னதம்பி’ என்ற படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், ‘தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும்’ உள்ளிட்ட பூ ஹீரோவாக நடித்துள்ளார். பிரபல தனியார், ‘டிவி’ நடத்திய, ‘பிக் பாஸ்’ என்ற, நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

https://twitter.com/PARITHITAMIL/status/1082672344491913216

நேற்று காலை, சென்னை, சூளைமேட்டில் உள்ள, நண்பரின் வீட்டிற்கு, தன், ‘எக்கோ ஸ்போர்ட்’ காரில் சென்றுள்ளார். குடிபோதையில் இருந்த அவர், மதியம், 2:00 மணிக்கு, சூளைமேடு இளங்கோவடிகள் தெரு வழியாக, வீட்டிற்கு திரும்பி உள்ளார்.அப்போது, அந்த தெருவில், ‘சிப்ஸ்’ கடை நடத்தி வரும், செல்வம், 41 என்பவரின் கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளார்.

காரை நிறுத்தாமல் வேகமாக சென்ற அவரை, இளங்கோவடிகள் தெருவில் இருந்தோர் மடக்கிப் பிடித்து, சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.பின், அண்ணா நகர் போக்குவரத்து போலீசாரிடம், சக்தி ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் சக்தி காரை விட்டு இறங்கி போதையில் தள்ளாடி விழும் காட்சி அடங்கிய விடியோவும் வெளியாகியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full