இணையத்தில் வைரலாகும் சம்யுக்தாவின் குறும்படம் - நீங்களே பாருங்க. இதான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு சொல்வாங்களோ.

By Rajkumar · 25/11/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஏழு வாரத்தை நிறைவு கிட்டத்தட்ட பாதி சீசனை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பேர் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தனர். நேற்றய நிகழ்ச்சியில் சம்யுக்தா சொன்ன 'கலீஜ்' மற்றும் 'வளர்ப்பு ' என்ற சொல் தான் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதனால் சம்யுக்தாவிற்கு எதிராக ட்விட்டரில் ஹேஷ் டேக் கூட ட்ரெண்டிங்கில் வந்ததது. இப்படி ஒரு நிலையில் சம்யுக்தாவிற்கு எதிராக நெட்டிசன்கள் குறும்படம் ஒன்றை போட்டுள்ளார்கள்.

https://twitter.com/BBPFriends20/status/1331201804474859520

பிக் பாஸ் வீட்டில் கடந்த திங்கள் கிழமை நடந்த இந்த வார நோமினேஷனில் சோம், ஆரி, பாலாஜி, அனிதா, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ் ஆகிய 7 பேர் நாமினேட் ஆனார்கள் . அதன் பின்னர் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக நாமினேஷனில் இடம்பெற்ற பின்னர் அதிலிருந்து தப்பிக்க புதிதாக 'Nomination Topple Card' என்ற ஒரு புதிய பாஸை அறிமுகம் செய்து இருந்து இருந்தனர். இதை வெற்றி பெரும் நபர் தனக்கு பதிலாக இந்த வாரம் நாமினேட் ஆகாத ஒரு நபரை நாமினேட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதில் பல்வேறு பேச்சு வார்த்தைக்கு பின்னர் அனிதாவிற்கு இந்த 'Nomination Topple Card' கிடைத்தது.பின்னர் வெளியில் வந்த அனிதா, தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்தார் (கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சம்யுக்தா நாமினேட் ஆன போது அவருக்கு பதிலாக நிஷாவை ரம்யா நாமினேட் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) இதனால் இந்த வாரம் நாமினேஷனில் இடம் பெற்றார் சம்யுக்தா.

https://twitter.com/ishyamss/status/1331038085887488000

இப்படி ஒரு நிலையில் சம்யுக்தாவிற்கு குறும்படம் ஒன்றை நெட்டிசன்கள் போட்டுள்ளனர். அதில் Unseen வீடியோவில் சோம் சேகருடன் பேசியுள்ள சம்யுக்தா, நீ கவலைபடாதே. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இந்த வாரம் சனம் அல்லது அனிதா வெளியில் செல்ல வேண்டும் ' என்று கூறியுள்ளார். ஆனால், அனிதாவாலேயே சம்யுக்தா இந்த வாரம் நாமினேட் ஆகிவிட்டார். இதனை குறும்படமாக போட்டுள்ள நெட்டிசன் ஒருவர் 'இது கூட நல்லா தான் இருக்கே. சம்யுக்தா, நீ ஒரு கணக்கு போடுற பிக்பாஸ் ஒரு கணக்கு போடுறான்' என்று கமன்ட் செய்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full