பிக் பாஸ்ல அப்படி தான் காட்டுவாங்க,அவளுக்கு ஓட் போடுங்க. சம்யுக்தாவிற்கு ஆதரவாக பாவனா போட்ட பதிவு.

By Rajkumar · 28/11/2020

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ரியோ, ரேகா, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ்,ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், வேல்முருகன் என்று பல பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரு சில புது முகங்கள் கூட கலந்து கொண்டு இருந்தனர்.அந்த வகையில் சம்யுக்தாவும் ஒருவர்.பிக் பாஸில் இவரை பற்றி இவர் சொன்னது. நான் படிச்சது இன்ஜினியரிங். கார்ப்பரேட்டில் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் அதே நேரத்தில் மாடலிங் செய்ய வேண்டும் என்கிற ஆசை இருந்துகொண்டே இருக்கும். அது போல தான் மிஸ் சென்னை டைட்டில் ஜெயித்தேன்.

https://twitter.com/Bhavna__B/status/1332556648225808384

அதனால் மாடலிங், நடனம் ஆகியவற்றின் மீது ஈர்ப்பு எப்போதுமே இருந்திருக்கிறது. என் மகனுக்கு 4 வயது ஆகிறது. அவன் பிறந்து ஆறு மாதத்திலேயே நான் ரேம்ப் வாக் செய்ய வந்துவிட்டேன்.மேலும் இரண்டு பிஸ்னஸ் நடத்தி வருகிறேன். சோசியல் மீடியா influencer ஆக இருக்கிறேன். நான் ஒரு ஃபிட் மாம்.என்னை போன்று இருப்பவர்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்க விரும்புகிறேன். பிக் பாஸ் வாய்ப்பை நான் மிஸ் செய்ய விரும்பவில்லை என்று கூறி இருந்தார். ஆனால், இவர் பிக் பாஸ் மேடையில் இவர் சொல்லாத ஒரு விஷயம் இவர் பாவனாவின் நெருங்கிய தோழி என்பது தான்.

இவரும் சம்யுக்தாவும் இணைந்து நடனமாடி பல வீடியோகளை போட்டுள்ளார்கள்.ஆனால், சம்யுக்தா இது நாள் வரை, தனக்கு பாவனாவை தெரியும் என்று எங்கேயும் சொன்னதும் கிடையாது. சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இதனால் வரை சம்யுக்தா குறித்து பாவனா எந்த ஒரு ட்வீட்டையும் போடாமல் இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் சம்யுக்தா எலிமினேஷனில் இடம் பெற்று இருப்பதால் அவருக்கு வாக்களிக்குமாறு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்யுக்தாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட கால் என்னை பதிவிட்டு நம்முடைய பெண்ணை காப்பாற்றுங்கள் என்று கூறியிருக்கிறார்.

https://twitter.com/edwinraj87/status/1332568692094164993

இந்த பதிவை பார்த்த பலர், பாவனாவை திட்டி தீர்த்து வந்தனர் . இப்படி ஒரு நிலையில் இதற்கு விளக்கமளிக்கும் வகையில் பாவனா மீண்டும் ஒரு டீவீட்டை போட்டுள்ளார். அதில்., நாம் அனைவருக்கும் தெரியும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் ஒருவரில் ஒருபக்கம் மட்டும்தான் காண்பிக்கப்படும். எனக்கு சம்யுக்தாவை பல ஆண்டுகளாக தெரியும். அவருக்கு நல்ல குணம் இருக்கிறது. அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பை கொடுத்து உள்ளே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனை இதில் வெறுக்கவோ / அவதூறாக பேசவோ ஒன்றும் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full