ப்ரோமோவால் வந்த வினை - ட்ரெண்டிங்கில் சம்யுக்தா. ஆனா கழுவி ஊத்தறாங்க. என்னனு பாருங்க.

By Rajkumar · 24/11/2020

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ரியோ, ரேகா, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ்,ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், வேல்முருகன் என்று பல பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரு சில புது முகங்கள் கூட கலந்து கொண்டு இருந்தனர்.அந்த வகையில் சம்யுக்தாவும் ஒருவர். மாடல் அழகியான இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார் அதே போல பல தொழில்களையும் செய்து வருகிறார்.

https://twitter.com/VJ_CEO/status/1331175827514351618

மேலும், இவர் மிஸ் சென்னை பட்டத்தை கூட ஜெயித்திருக்கிறார். மாடலிங் நடனம் போன்ற பல்வேறு விஷயங்களில் ஈர்ப்பு கொண்ட இவர் விஜய் டிவி தொகுப்பாளினியான பாவனாவின் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் சம்யுக்தா கொஞ்சம் நடுநிலையாக தான் இருந்த வந்தார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல இவர் பாலாஜி டீமில் இணைந்து விட்டார். அதிலும் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி 'தருதல' பஞ்சாயத்தில் பாலாஜிக்கு ஆதரவாகத்தான் சம்யுக்தா பேசியிருந்தார். பாலாஜிக்கு யாரெல்லாம் பிடிக்காது அவரை சமைப்பதற்கும் பிடிக்காது என்பதை வெளிப்படையாகவே காட்டி வருகிறார்.

சனம் ஷெட்டி மட்டும் பாலாஜி பிரச்சினை ஏற்பட்ட பின்னர் சம்யுக்தா சனம் ஷெட்டியிடம் அடிக்கடி ஏதாவது ஒரு சண்டையை போட்டு வருகிறார்.இப்படி ஒரு நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கால் சென்டரில் மற்ற போட்டியாளர்கள் தங்களுக்குத் தோன்றும் கேள்விகளை கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவில் சம்யுக்தாவிற்கு சனம் ஷெட்டி கால் செய்து பேசுகிறார். அப்போது சம்யுக்தா நீங்கள் பார்ப்பதற்கு தான் அழகாக இருக்கிறீர்கள் ஆனால் வாயை திறந்தாலே கலீஜ் என்று கூறி இருந்தார்.

https://twitter.com/inter_netizen/status/1331185162948788228

இதற்கு பதிலடி கொடுத்த சனம், நம்ம புத்தியில் கலீஜ் இருந்தால் தான் அந்த வார்தை வரும் என்று கூறி இருந்தார். மேலும், சனம் ஷெட்டி, மத்தவங்களுக்கு நான் கேப்டன் ஆனது அவ்வளவு வெறுப்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என்று கூறிய சம்யுக்தா, அதற்கு என்ன காரணம் என்று சனம் கேட்டதற்கு அது அவங்களோட வளர்ப்பு என்று கூறி இருந்தார். இந்த விஷயம் தான் தற்போது வைரலாக பரவ ட்விட்டரில் #Samyuktha ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது அதில் பலரும் சம்யுக்தாவிற்கு எதிராக ட்வீட்களை பகிர்ந்து வருகின்றனர்.

https://twitter.com/nigalvugal/status/1331183652554752001

ஏற்கனவே, நீதி மன்ற டாஸ்கின் போது ஆரி, இவரை தறுதலை என்று குறிப்பிட்டுவிட்டார் என்று ஆரியை ஒருமையில் பேசிய சம்யுக்தா 'ஒரு பொண்ணு கிட்ட பேச தெரியல, இவன் எல்லாம் வந்துட்டான் பிக் பாஸ் வீட்டுக்கு' என்று கூறியதோடு ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சனம் ஷெட்டியையும் இப்படி கூறியுள்ளது ரசிகர்களின் வெறுப்பை தூண்டியுள்ளது. மேலும், சம்யுக்தாவை விமர்சித்து பல ட்வீட்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full