இதுக்கு முன்னாடியும் உள்ள அண்ணா அண்ணண்னு சொல்லிட்டு வெளிய போய் ஊர் சுத்திட்டு இருக்காங்க - விளாசிய சனம்

By Rajkumar · 31/10/2023

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐசு செய்யும் விஷயங்கள் கேவலமாக இருக்கிறது என்று முன்னாள் போட்டியாளர் சனம் ஷெட்டி கழுவி ஊற்றி இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதல் கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இருந்தது இல்லை. அந்த வகையில் நிகழ்ச்சி ஆரம்பத்தில் மணி - ரவீனா தான் காதல் கண்டன்ட்க்கு கிசு கிசுக்கப்பட்டு இருந்தனர். இவர்களை தொடர்ந்து தற்போது காதல் கிசு கிசுவில் சிக்கி இருப்பது நிக்சன் - ஐசு தான். ஆரம்பத்தில் இருவரும் நன்றாக தான் பழகி வந்தார்கள். முதலில் ஐஷு மணி இடம் நெருக்கமாக பழக முயற்சித்தார்.

ஆனால், ரவீனா எப்போதும் மணியுடன் சுற்றி கொண்டு இருந்ததால் நிக்சனிடம் பழக ஆரம்பித்தார். பின் இருவரும் அதிக நேரம் பேசி பழக ஆரம்பித்தார்கள். எங்கு பார்த்தாலும் நிக்சன் ஐசு உட்கார்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஐசு தன்னுடைய கையில் என் எக்ஸ் என் என்று நிக்சன் பெயரை பதிவிட்டு இருக்கிறார். அதேபோல் நெக்சன் ஐசு வரும்போது ஹார்ட் சிம்ப்ளை வரைந்து காண்பித்திருக்கிறார்.

இதெல்லாம் தாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிக்சன் மற்றும் ஐசு ஆகிய இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது நிக்ஸன் தனது மைக்கை கழட்டி ஐசுவிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இருவரும் பேசிக்கொள்வது போல கண்ணாடியில் முத்தம் குடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் இவர்கள் இருவரின் செயலை கழுவி ஊற்றி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தன்னையும் நிக்சனையும் இணைத்து வீட்டில் உள்ளவர்கள் பேசுவது, புதிய போட்டியாளர்கள் சொன்ன கமெண்ட்டுகள் போன்றவற்றால் குழப்பம் அடைந்திருக்கும் ஐஷு, இது பற்றி ஒரு வழியாக மணியிடம் மனம் திறந்து பேசிக் கொண்டிருந்தார்.

View this post on Instagram

A post shared by LittleTalks (@littletalksmedia)

“அவனைப் பார்த்தாலும் பாவமா இருக்கு. அவாய்ட் பண்ணவும் முடியல. எனக்கு வெளியில் boyfriend இருக்குனு சொன்னதுக்கு. மூனு மாசம் தான அவனை தெரியும்னு கேக்குறான். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல என்று கூறி இருந்தார். இதை தொடர்ந்து நிக்சனைத் தனியாக அமர வைத்து, இதற்குத் தீர்வு காண ஐஷூ முடிவு செய்த ஐசு, நிக்ஸனிடம் '“இந்த வாரம் நான் வெளிய போயிட்டா நல்லாயிருக்கும்ன்னு தோணுது' என்று கூறினார்.

இதற்கு நிக்சன் ஒரு பர்ஸனா உன்னை எனக்குப் பிடிக்கும். அதே மாதிரிதான் உனக்கும். உன்னோட கம்பெனி எனக்குப் பிடிச்சிருக்கு. அவ்வளவுதான். இப்போது சொல். நீ சொன்னால் பர்ஸனலாக பேசுவதை நாம் நிறுத்திக் கொள்வோம்' என்று கூறினார். “சரி ஓகே.. அப்படியே செய்வோம்” என்று ஐசு சொன்னார், இருப்பினும் இவர்கள் இருவரின் சில்மிஷம் குறையவில்லை. இவர்கள் இப்படி பேசிய சில மணி நேரத்தில் ஒன்றாக ஒரே தட்டில் சாப்பிட்டனர்.

https://twitter.com/AndruDarlz_2/status/1718305176103354476

மேலும், ஐசுவை அனைவர் முன்பும் அலேக்காக தூக்கிகொண்டு போனார் நிக்சன். இதையெல்லாம் தாண்டி, ஐசு படுத்துக்கொண்டு இருக்கும் போது அவரது புருவத்தை தடவி 'உன் கண்ணு அழகாக இருக்குடி என்று வர்ணித்து பேசினார் நிக்சன். இவர்களின் இருவரின் செயல் சமூக வலைதளத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சனம் ஷெட்டி ' ஐசு மீது எனக்கு இருக்கும் மிகப்பெரிய ஏமாற்றமே.

https://twitter.com/itzSekar/status/1718985992030519540

தம்பி தம்பி என்று சொல்லிவிட்டு தற்போது எந்த இடத்திற்கு சென்று இருக்கிறார் பாருங்கள் இது அவர் மட்டும் கிடையாது. அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் அண்ணன் தங்கை உறவு என்பது மிகவும் புனிதமானது. அப்படி ஒரு உறவை ஐசு போன்ற நபர்கள் கொச்சைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இதற்கு முன்னாடி சீசனில் கூட உள்ளே அண்ணா அண்ணா என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அப்படி செய்தால்தான் இவர்கள் எல்லாம் இப்படி செய்கிறார்கள் இதை பார்ப்பதற்கு கேவலமாக இருக்கிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full