இதனால் தான் தாமதமாகிடிச்சி - பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சனம் ஷெட்டி வெளியிட்ட முதல் வீடியோ.

By Rajkumar · 12/12/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 68 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் ஞாயிற்று கிழமை (டிசம்பர் 6) சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, ரம்யா பாண்டியன், ஷிவானி, நிஷா, சனம் ஷெட்டி ஆகியோர் இடம்பெற்றனர். இந்த வாரம் ஆஜீத், ஷிவானி, நிஷா, அனிதா ஆகிய யாரவது 4 பேரில் ஒருவர் தான் நிச்சயம் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர் பார்த்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஞாயிற்று கிழமை நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார். மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டியை விட நிஷா, ஷிவானி, ஆஜித் போன்றவர்கள் எந்த விதத்தில் சிறந்த போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சனம் ஷெட்டி வெளியேறியதையடுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது.

இதையும் பாருங்க : கையில் துப்பாக்கியுடன் எருமை மீது யாஷிகா - சர்ச்சைக்கு உள்ளான புகைப்படம்.

சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் சீக்ரெட் ரூமிலாவது வைக்கப்படுவாரா என்று எதிர்பார்க்கப்ட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் ரசிகர்கள் போலவே பல்வேறு பிரபலங்கள் கூட சனம் ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நடிகை சனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/SamSanamShetty1/status/1337742323598327809

அந்த வீடியோவில் பேசியுள்ள சனம் ஷெட்டி,பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் நான் என்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவழித்து வந்தேன். கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக சரியாக தூக்கம் கிடையாது சாப்பாடு கிடையாது. எனவே, கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது அதனால் தான் உங்களை சந்திப்பதில் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.என்னுடைய இந்த பிக் பாஸ் பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. பிக்பாஸில் அடுத்த ஆதரவு போன்று என்னுடைய படங்களுக்கும் உங்களின் ஆதரவை கொடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full