பிக் பாஸுக்கு பின் சனம் ஷெட்டி வெளியிட்ட வீடியோ - என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

By Rajkumar · 7/12/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 63 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் நேற்று (டிசம்பர் 6) சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, ரம்யா பாண்டியன், ஷிவானி, நிஷா, சனம் ஷெட்டி ஆகியோர் இடம்பெற்றனர். இந்த வாரம் ஆஜீத், ஷிவானி, நிஷா, அனிதா ஆகிய யாரவது 4 பேரில் ஒருவர் தான் நிச்சயம் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர் பார்த்தனர்.

https://twitter.com/SanamShetty_/status/1335631121858449410

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார்.மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டியை விட நிஷா, ஷிவானி, ஆஜித் போன்றவர்கள் எந்த விதத்தில் சிறந்த போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சனம் ஷெட்டி வெளியேறியதையடுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது.

சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் சீக்ரெட் ரூமிலாவது வைக்கப்படுவாரா என்று எதிர்பார்க்கப்ட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் ரசிகர்கள் போலவே பல்வேறு பிரபலங்கள் கூட சனம் ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நடிகை சனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/SanamShettyoff/status/1335907112908595200

அந்த வீடியோவில் பேசியுள்ள சனம் ஷெட்டி,எல்லோருக்கும் வணக்கம் தமிழ் நாட்டு மக்களுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. தொடர்ந்து இதுவரை நீங்கள் எனக்கு அன்பு கொடுத்துள்ளீர்கள். எனக்கு ஆதரவை கொடுத்து என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். என்னுடைய இந்த பிக் பாஸ் பயணத்தில் உங்கள் வீட்டு பெண்ணை போல என்னை பாவித்து எனக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறீர்கள். அதற்கு நன்றி. கூடிய விரைவில் உங்கள் அனைவரையும் நான் சந்திக்கிறேன் உங்களின் அன்பும் ஆதரவும் எனக்கு தொடர்ந்து அளியுங்கள் என்று கூறியுள்ளார். .

behindtalkies AMP · Quick view
View full