பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த டிம்பர் 6 ஆம் தேதி சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார். மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டியை விட நிஷா, ஷிவானி, ஆஜித் போன்றவர்கள் எந்த விதத்தில் சிறந்த போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சனம் ஷெட்டி வெளியேறியதையடுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது.சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் சீக்ரெட் ரூமிலாவது வைக்கப்படுவாரா என்று எதிர்பார்க்கப்ட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை.

சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் ரசிகர்கள் போலவே பல்வேறு பிரபலங்கள் கூட சனம் ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதே போல சனம் ஷெட்டி வனிதாவை போல வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சனம் ஷெட்டி எந்த ஒரு பேட்டியிலும் பங்குபெறவில்லை. இப்படி ஒரு நிலையில் பிரபல ஆங்கில இதழான Times Of India-விற்கு சனம் ஷெட்டி பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் சனம் ஷெட்டியிடன் பிக் பாஸில் கலந்து கொண்டதற்கான காரணம் கேட்கப்பட்டு இருந்தது.

Advertisement

அதற்கு பதில் அளித்த அவர், மக்களுக்கு என்னை ஒரு மாடல் அழகியாக தெரியும் ஆனால் நான் கிட்டத்தட்ட இருபது படங்களில் வெவ்வேறு வழிகளில் நடித்திருக்கிறேன் இருப்பினும் ஒரு நடிகையாக எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை இந்த ஒரு காரணத்திற்காக தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் ஏனென்றால் குறைந்த காலகட்டத்தில் என்னைப் பற்றி உலகம் முழுதும் தெரியவரும் என்று எண்ணினேன். அதை நம்பித்தான் பிக் பாஸுக்கு போனேன். ஆனால், எந்த நேரத்திலும் வெளியேற தயாராக இருந்தேன். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எனக்கு கிடைத்த பிரபலம் எனக்கு திருப்தியை அளித்து இருக்கிறது. எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன் என்றுதான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், தன்னுடைய ஏவிக்ஷன் பற்றிய பேசிய சனம் ஷெட்டி, நான் முதல் வாரத்தில் இருந்தே நாமினேட் செய்யப்பட்டேன். அதனால் என்னுடைய வெளியேற்றம் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கவில்லை. நான் நன்றாக விளையாட வேண்டும் என்பதில்தான் கவனமாக இருந்தேன். வீட்டில் உள்ள அனைவருமே பட்டத்தை வெல்வதற்காக சிறப்பாக விளையாடினார்கள். அதனால் எனக்குள் நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். இங்கு நான் வெற்றிபெற தான் வந்திருக்கிறேன் என்று. ஆனால், அதே சமயம் ஒருவேளை நான் வெளியேறினால் எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் வெளியேற வேண்டும் என்று என்னை நானே தயார் படுத்திக் கொண்டிருந்தேன் என்று கூறியுள்ளார் சனம் ஷெட்டி.

Advertisement
Advertisement