முகெனை போல சாண்டி குடும்பத்திலும் நேர்ந்த இறப்பு. சோகத்தில் சாண்டி குடும்பத்தார்.

By Rajkumar · 28/1/2020

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வின்னரான முகென் ராவ் தந்தை நேற்று மாரடைப்பால் காலமாகி உள்ள சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இப்படி ஒரு நிலையில் சாண்டியின் மனைவி வீட்டிலும் சோகம் சூழ்ந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சியமான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர் சாண்டி. தனது நடனம் மற்றும் நகைச்சுவையான குணம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாண்டி.

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் நடன இயக்குனராக தனது பயணத்தை துவங்கியவர் சாண்டி. தற்போது சிம்பு முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி வரை கொரியாகிராஃப் செய்யுமா அளவிற்கு வளர்த்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் சிரித்து வைத்துக்கொண்டிருந்தார் சாண்டி. மாஸ்டர் சாண்டி, நடிகை காஜலுடன் பல ஆண்டுகளாக லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தார். ஆனால், பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக காஜலை பிரிந்தார் சாண்டி.

இதையும் பாருங்க : முகென் தந்தையின் இறுதி சடங்கு. கண்ணீருடன் தந்தையை சுமந்து செல்லும் முகென். வெளியான வீடியோ.

அதன் பின்னர் சில்வியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடனும் திருமணம் நடைபெற்றது. மேலும், கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. சொல்லப்போனால் பிக் பாஸ் வீட்டிற்க்குள் நுழைந்த சாண்டியின் அன்பு மகள் லாலா தான் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். சாண்டி தனது மனைவியை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்.

மேலும், சாண்டி மனைவிக்கு ஒரு தங்கையும் இருக்கிறார். அது மட்டுமில்லாமல் சாண்டி தனது மனைவியின் உருவத்தை டாட்டூவாக கூட குத்திக்கொண்டு உள்ளார். இந்த நிலையில் சாண்டி மனைவி சில்வியாவின் தந்தை காலமாகியுள்ளார். ஏற்கனவே முகென் தந்தை இறப்பினால் பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் சோகத்தில் உள்ள நிலையில் தற்போது சாண்டி வீட்டிலும் இப்படி ஒரு சோகம் அரங்கேறியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full