பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்கவே சோகமமும் கண்ணீருக்காக சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக மேடையில் நின்று தங்களது வாழ்வில் நடந்த சோகங்களை பகிர்ந்து வந்தனர்.

இதுவரை மோகன் வைத்யா,ரேஷ்மா, தர்ஷன், கவின் என்று அனைவரும் சொன்ன கதைகள் பார்வையாளர்களை கண்ணீர் கடலில்ஆழ்த்தியது . இன்று
(ஜூன் 29) ஒளிபரப்பான நிகழ்ச்சியிலும் இதே டாஸ்க் தொடர்ந்தது. அப்போது சாண்டி தனது கதையை சொல்ல ஆரம்பித்தார்.

இதையும் பாருங்க : நீ என் பிறந்தநாளை சிறப்பாக்கிவிட்டாய்.! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.! 

Advertisement

அப்போது அவருக்கு உங்கள் அம்மா பற்றி சொல்லுங்கள் என்று சீட் வந்தது . அதன் பின்னர் பேசத்தொடங்கிய சாண்டி, எனக்கு அப்பா அம்மா கிடையாது நான் ஆசிரமத்தில் தான் வள்ர்ந்தேன் என்று சொன்னதும் அனைவர் கண்களிலும் கண்ணீர் பொங்க ஆரபித்துவிட்டது.

அனைவரையும் சிரித்து மகிழ்வித்து வரும் சாண்டி வாழ்வில் இப்படி ஒரு சோகமா என்று பலரும் கண்கலங்கி விட்டனர். அதே போல லாஸ்லியாவும் கண்களில் கண்ணீர் விட துவங்கினார். அதன் பின்னர் சாண்டி நான் அனாதை எல்லாம் கிடையாது எனக்கு அம்மா அப்பா இருக்காங்க நீ ரொம்ப அழாத உன்ன டெஸ்ட் பண்ணேன் என்று லாஸ்லியவை பார்த்து கிண்டலடிக்கிறார்.

Advertisement

அதன் பின்னர் லாஸ்லியா , சாண்டியிடன் மொக்கை வாங்கிய முகத்தோடு சிறுத்துகொண்டே தனது கண்ணீரை துடைத்துக்கொள்கிறார் . அதன் பின்னர் சாண்டி தனது கதையை சொல்லத் துவங்கினார். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இந்த டாஸ்கில் சாண்டி மட்டும் தான் கதை சொல்லி யாரையும் அழ வைக்கவில்லை.

Advertisement
Advertisement