கிறிஸ்துவராக இருந்தும் தன் மகனுக்கு சாண்டி கிருஷ்ணர் வேடம் போட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆக்டொபர் 6 ஆம் தேதி மிகவும் கோலாகலமாக நிறைவடைந்தது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் முதல் பரிசினை மலேசியாவை சேர்ந்த முகேன் தட்டி சென்றார். மேலும், இந்த சீஸனின் இரண்டாம் இடத்தை பிடித்தார் பிரபல நடன இயக்குனரான சாண்டி.

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் சாண்டி பலராலும் அறியப்பட்ட மிகவும் பிரபலமான நபர் என்றே கூறலாம். பல ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் தான் சாண்டி ரசிகர்களுக்கு பிரபலமானார். மேலும் இவர் சன் மியூசிக் தொகுப்பாளினி காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

ஆனால், சில ஆண்டுகளிலேயே அவரை பிரிந்துவிட்டார். அதன் பின்னர் சில்வியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன ஓராண்டிலேயே இவருக்கு மகளும் பிறந்தார். விஜய் டிவி டான்ஸ் ஷோ நடுவராக பங்கேற்ற சாண்டி பிக் பாஸ் 3யில் கலந்து கொண்டார். சாண்டி பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவரது செல்ல மகள் லாலா உள்ளே சென்ற போது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அந்த எபிசொட் ரசிகர்கள் மறக்க முடியாத எபிசோடாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சாண்டி மனைவி இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் தான் அவருக்கு ஆண் குழந்தை பிறந்து இருந்தது. தன் மகனுக்கு பிரபல WWE வீரரான ஷான் மைக்கேல் பேரை வைத்துள்ளார். இந்த நிலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தன் மகனுக்கு கிருஷ்ணன் வேடம் அணிவித்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் சாண்டி.

Advertisement

கிறிஸ்துவராக இருந்தும் சாண்டி கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி இருப்பது பலரின் பாராட்டை பெற்று இருக்கிறது. சமீபத்தில் விக்ரம் 61 படத்தில் பூஜை நடைபெற்று இருந்தது. இதில் படக்குழுவினர் விக்ரம், பா ரஞ்சித், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த பூஜையில் கலந்துகொண்ட குழுவினருக்கு அர்ச்சகர் விபூதி இட்டு மாலை அணிவித்து நிகழ்ச்சியை நடத்தி இருந்தார்.

Advertisement

அப்போது ஒவ்வொருவருக்கும் விபூதி வைத்த அர்ச்சகரிடம் நடிகர் விக்ரம் வேண்டாம் என்று பணிவாக தவிர்த்து விட்டார். விக்ரம் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் விபூதி வைக்க வேண்டாம் என அர்ச்சகரிடம் தெரிவித்தார். ஆனால், நடன இயக்குநர் சாண்டி தனக்கு விபூதி வைத்து விடுமாறு கேட்டு வைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement