'எனக்கு அம்மா அப்பா இல்லையேனு கவலைபட்டதில்லை மாமா ' - சஞ்சீவ் அக்கா மகள் உருக்கமான பதிவு.

By ·

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 81 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேறி இன்னும் 10 பேர் உள்ளே இருக்கின்றனர்.

இதில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்த அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் அடக்கம். இதில் சஞ்சீவ் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். அதே போல மறைந்த நடிகை இவரது அக்கா சிந்துவிற்கு ஒரு மகள் இருப்பது சஞ்சீவ் சொல்லி தான் பலருக்கும் தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அன்பறிவு படகுழு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து இருந்தனர். அப்போது அந்த இயக்குனர் அஸ்வின் தான் தன் அக்கா மகளின் கணவர் என்று கூறி இருந்தார் சஞ்சீவ்.

அஸ்வின் மற்றும் ஸ்ரேயா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் சிந்துவின் மகள் ஸ்ரேயா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுளதாவது 'என் வாழ்க்கையில் நடந்திருக்கும் மிகவும் சந்தோஷமான சிறப்பான தருணம் இது. இந்த நாளுக்காக தான் நான் 12 ஆண்டுகளுக்கு முன் கனவு கண்டுகொண்டிருந்தேன்.

நான் காதலிக்கிறேன் என்று என்னுடைய மாமா சஞ்சீவ்விற்கு அது தெரிந்த போது அவர் என்னை நம்பினார். அதே அளவு அஸ்வினும் பல கஷ்டங்களை கடந்து சாதிப்பார் என்று நம்பினார். என்னை பெற்றவர்களை விட அதிகமான பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார். எனவே, நானும் அஸ்வினும் அவரை பெருமை கொள்ளும் அளவுக்கு நடந்துகொள்வோம். எப்போதும் அவரை நாங்கள் தோய்ந்து போக விடமாட்டோம்.

இந்த படத்தின் டிரைலரை சஞ்சீவ் மாமா பார்க்க மாட்டார் என்று நான் கவலையாக இருந்த போது இது நடந்தது. இந்த உலகமே பார்க்கும் வகையில் அதுவும் ஒரு ஜாம்பவான் முன்பு இந்த படத்தின் ட்ரெய்லரை அவர் கண்டார். இதை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. கண்களில் ஆனந்தக் கண்ணீர் வருகிறது. இதை நான் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய நண்பர்களும் குடும்பத்தினரும் யாரென்று தெரியாதவர்கள் கூட இந்த தருணத்தை மீண்டும் மீண்டும் பார்த்து பூரித்துப் போனதாக கூறினார்கள்.

அஸ்வின் நீ எங்களை மிகவும் பெருமையடைய செய்துவிட்டாய். என் மாமா மீது நான் அன்பு வைத்திருப்பது வேறு ஆனால், நீயும் அதே அளவு அன்பை அவர் மீது வைத்திருக்கிறாய். என்னுடைய கனவை நனவாக்கியதற்கு நன்றி, உங்கள் இருவருக்கும் நன்றி. எப்போதெல்லாம் எனக்கு ஒரு சாதாரண குடும்பம் இல்லையே என்று நான் வருத்தப்பட்ட போது நீங்கள் இருவரும் அதை தவறு என்று உணர்த்தி இருக்கிறீர்கள். நீங்கள் இருக்கும் வரை இதுவரை நான் எனக்கு பெற்றோர்கள் இல்லையே என்று கவலைப்பட்டது இல்லை. என்னுடைய குடும்பமே எனக்கு பலம் இதைவிட வேறு சந்தோஷம் கிடையாது என்று உருக்கமாக பதிவிட்டிருக்கிறார் ஷ்ரேயா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full