பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் சரவண விக்ரம்- வெளியான அப்டேட்

By subhashini · 15/12/2024

பிக் பாஸ் சரவண விக்ரமுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேரவை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த ஆண்டு வெற்றிகரமாக முடிவடைந்த சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியல் அண்ணன்- தம்பிகளுக்கிடையான பாச கதையை மையமாகக் கொண்டது. இந்த சீரியலில் கண்ணன் என்ற கடைசி தம்பி ரோலில் நடித்திருந்தவர் சரவண விக்ரம். இந்த சீரியல் மூலம் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதற்கு முன்பு இவர் ரிலீஸ் வீடியோ போட்டு இருந்தார். அதிலும், இவர் விஜய்யின் பாடல்களுக்கு நடனம் ஆடி, வசனம் பேசி போடும் வீடியோக்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

பிக் பாஸ் சரவண விக்ரம்:

அதன் பின் தான் இவருக்கு சீரியல் வாய்ப்பு வந்தது. சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து இறுதி வரை பெரிதாக எந்த ஒரு விஷயத்திலுமே ஈடுபாடுடன் செய்யவில்லை. மற்ற போட்டியாளர்கள் சண்டை விஷயத்திலுமே அதை கண்டு கொள்ளவும் இல்லை. அதோடு அடிக்கடி இவர், தன்னைத்தானே டைட்டில் வின்னர் என்றும் சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் ரசிகர்களுக்கு மத்தியில் கடுப்பை ஏற்றி இருந்தது.

நிகழ்ச்சியில் சரவண விக்ரம்:

அதே போல மாயா மற்றும் பூர்ணிமாவுடன் இவர் சேர்ந்து அவர்களுக்கு ஜால்ரா அடித்தது எல்லாம் ஓவராக இருந்தது. கடைசியில் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்து வைத்திருந்த மொத்த பெயரையுமே கெடுத்துக் கொண்டார் என்று சொல்லலாம். நிகழ்ச்சியை விட்டு இவர் வெளிவந்த பிறகும் நிறைய பேர் ட்ரோல் செய்கின்றார்கள். அதோடு இவர் எந்த ஒரு சீரியலிலும் கமிட் ஆகவில்லை.

சரவண விக்ரம் ஹீரோ:

இந்த நிலையில் சரவண விக்ரம் சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இவர் முதன்முதலாக ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். பிரவீன் கே மணி என்பவர் தான் படத்தை இயக்குகிறார். இவர் புதுமுக இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் குறித்த தகவல்:

இந்த படத்தில் சரவணனுக்கு ஜோடியாக ஹசிலி என்பவர் நடிக்கிறார். இந்த படத்தினுடைய பூஜை சமீபத்தில் தான் போடப்பட்டது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் கலக்கி கொண்டு இருக்கும் ஹரிஷ் கல்யாண், ஆரவ், கவின் வரிசையில் தற்போது சரவணன் விக்ரமும் இணைந்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full