'எனக்கு திடீரென்று என் Fans ஞாபகம் வந்துடிச்சி' தனது ரசிகர்கள் குறித்து பேசிய டைட்டில் வின்னர் விக்ரம்.

By Dhilip Kumar · 13/11/2023

பிக் பாஸ் சரவணன் விக்ரமை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 38 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

https://twitter.com/itsgopi45/status/1724026721996042318?s=48

மேலும், முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். பின் கடந்த சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல்.

சரவணா விக்ரம் குறித்த தகவல்:

ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் பரீச்சயமான நபர்களில் ஒருவர் சரவணன் விக்ரம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். தற்போது சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவடைந்தது. அதோடு இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருப்பவர். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.

https://twitter.com/msimath/status/1724023687329046551?s=48

இவர் மீது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்போடு இருந்தார்கள். ஆனால், நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து இப்போது வரை சரவணன் பெரிதாக எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் செய்யவில்லை. மற்ற போட்டியாளர்கள் சண்டை போட்டாலும் கூட அதில் அவர் ஈடுபடவும் இல்லை, கமெண்ட்ஸ் சொல்வதும் இல்லை. அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டு வந்து விடுகிறார். இதனாலே பிக் பாஸ் ரசிகர்கள் இவரை கிண்டலடித்து விமர்சித்திருந்தார்கள்.

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் மாயா & கோ டீமில் சேர்ந்துகொண்டு அர்ச்சனாவை எல்லாம் கேள்வி கேட்டார். அப்போது விசித்ரா 'நீ போன வாரமே நாமினேட் ஆகியிருப்பாய். இன்னும் ஒரு சில வரம் தான் நீ இருப்பாய். அதற்குள் நல்ல ஜாலியாக இரு என்று சொல்லி அனுப்பினார். அதில் இருந்தே இவர் சமூக வலைத்தளத்தில் கேலி செய்யப்பட்டு வருகிறார்.

https://twitter.com/nithinmna/status/1724077226704937060

அதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னை தானே டைட்டில் வின்னர் என்று இவரே கூறிக்கொண்டதால் இவரை டைட்டில் வின்னர் சரவணன் என்று கேலி செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இவர் பூர்ணிமா மற்றும் அக்ஷயாவிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது 'எனக்கு திடீரென்று என் Fans ஞாபகம் வந்துடிச்சி. எனக்கு பயங்கர சப்போர்ட் பண்ணுவாங்க. நான் டல்லாக இருந்த டைமில் கூட ரொம்ப என்கரேஜ் பண்ணுவாங்க' என்று பேசி இருப்பது தற்போது மீண்டும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full