எல்லாரும் என்னை ஏன் டார்கட் செய்றாங்கன்னு தெரியல - மீண்டும் கேமரா முன் புலம்பிய டைட்டில் வின்னர்.

By Rajkumar · 17/11/2023

கமெரா முன்பு மீண்டும் விக்ரம் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பரீச்சயமான நபர்களில் ஒருவர் சரவணன் விக்ரம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். தற்போது சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவடைந்தது. அதோடு இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.

https://twitter.com/Filmophile_Man/status/1725263615861932044

இவர் மீது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்போடு இருந்தார்கள். ஆனால், நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து இப்போது வரை சரவணன் பெரிதாக எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் செய்யவில்லை. மற்ற போட்டியாளர்கள் சண்டை போட்டாலும் கூட அதில் அவர் ஈடுபடவும் இல்லை, கமெண்ட்ஸ் சொல்வதும் இல்லை. அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டு வந்து விடுகிறார். இதனாலே பிக் பாஸ் ரசிகர்கள் இவரை கிண்டலடித்து விமர்சித்திருந்தார்கள்.

டாஸ்க்கில் கூட இவர் பெரிதாக ஈடுபாடுடன் செய்வதில்லை. பின் சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா உடன் நடந்த சண்டையில் சரவணன் விக்ரம் பேசியிருக்கிறார். அதற்கு அர்ச்சனா, இதுவரையும் நீங்கள் எதுவுமே சொல்லவில்லை. இப்போது மட்டும் எதற்கு கேள்வி கேட்கிறீர்கள்? இதற்கு முன்பு என்ன செய்தீர்களோ அதே செய்யுங்கள்? என்று சொல்கிறார் உடனே விசித்திரா, நீ போன வாரமே நாமினேட் ஆகியிருப்பாய். இன்னும் ஒரு சில வரம் தான் நீ இருப்பாய். அதற்குள் நல்ல ஜாலியாக இரு என்று சொல்லிவிடுகிறார்.

https://twitter.com/Ganesh_Gansi/status/1725177091480821962

இருந்தாலும், இவர் ஏதாவது ஒன்று செய்யணும் என்று பூர்ணிமா- ஐசு உடன் நெருக்கமாக பழகி வருகிறார். இவர் இருவரையுமே காதலிப்பது போல காண்பிக்கிறார்கள். ஆனால், பூர்ணிமா- ஐசு இருவரும் சரவணன் விக்ரமை ஒரு காமெடி பீஸ் ஆக பார்க்கிறார்கள். இந்த நிலையில் சரவணன் விக்ரம், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி யின் டைட்டில் வின்னர் சரவண விக்ரம் என்றுகூறி இருந்தார்.

https://twitter.com/itsmeaziz07/status/1724086120768827867

இந்த வீடியோ சோசியல் மீடியாவில் கேலிக்குள்ளாகி இருந்தது. இதை பார்த்த பலருமே, இதெல்லாம் ஓவராக இல்லை. நீ டைட்டில் வின்னரா? உனக்கு இது தேவையா? என்றெல்லாம் கிண்டல் அடித்து வீடியோவை வைரலாக்கி வந்தனர். இதனை தொடர்ந்து இவரை டைட்டில் வின்னர் சரவணன் என்று தொடர்ந்து கேலி செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட தனது ரசிகர்கள் ஞாபகம் வந்துவிட்டதாக இவர் சொன்னது கேலிக்கு உள்ளானது.

https://twitter.com/itsgopi45/status/1724026721996042318?s=48

அவ்வளவு ஏன், பிக் பாஸே கூட இவரை அடிக்கடி போய் கதவை மூடிவிட்டு வருமாறு மொக்கை கொடுத்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் மீண்டும் இவர் கேமரா முன் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் 'இந்த முறை டபுள் ஏவிக்ஷனா என்று தெரியவில்லை. எதுவும் செய்யாமல் என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் என்று புரியவில்லை. சனிக்கிழமை என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை. யாரை நம்புவது என்று தெரியவில்லை.என்று பேசி இருப்பது மீண்டும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full