சூப்பர் ஸ்டார் பட்டம் போய் இளைய தளபதி பட்டம் குறித்த குறித்த சர்ச்சை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை தான் வைரலாகி கொண்டு இருந்தது. இதனால் ரஜினி- விஜய் ரசிகர்களுக்கு இடையில் பனிப்போரே நடந்தது. இருதரப்பு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி சோசியல் மீடியாவில் மீம்ஸ்களை தெறிக்க விட்டிருந்தார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சரவணனுக்கு இளைய தளபதி என்ற பட்டம் வழங்கி இருக்கும் சர்ச்சை தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் சரவணன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த பருத்தி வீரன் என்ற படத்தில் சித்தப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மீண்டும் தனெக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.

Advertisement

நடிகர் சரவணன் போஸ்டர் குறித்த சர்ச்சை:

தற்போது இவர் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார். பீஸ்ட் என்ற படு தோல்வி படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இந்த படத்தை ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாடி வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் நடிகர் சரவணன் நடித்தது குறித்து அவருடைய ரசிகர்கள் படம் ரிலீஸ் ஆவதை ஓட்டி தஞ்சை பகுதியில் போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்.

இளைய தளபதி பட்டம் வழங்கியவர்:

அதில், இளைய தளபதி என்று சரவணனை குறிப்பிட்டிருந்தார்கள். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் அந்த போஸ்டரை கிழித்து இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சரவணனின் சொந்த ஊரில் விசாரித்த போது, 90களில் சேலம் நாலு ரோடு ஜங்ஷனில் ஒரு கூட்டம் இருக்கும். அதில் நம்ம ஊரு காரன் ஒருத்தன் சினிமாவில் போயிருக்கான் என்று வீரபாண்டி ஆறுமுகம் என்பவர் சரவணனுக்கு இளைய தளபதி இந்த பட்டத்தை கொடுத்தார். சினிமா என்றாலே ஏதாவது ஒரு பட்டம் இருக்கனும் இல்லையா? அதனால் தளபதி என்ற பட்டம் தந்தார். ஆனால், சென்னையில் ஏற்கனவே தளபதி(ஸ்டாலின்) ஒருத்தர் இருந்தார்.

Advertisement

சரவணனுக்கு கிடைத்த பட்டம்:

அதனால் இவருக்கு இளையதளபதி கொடுத்து விடலாம் என்று சொன்னார்கள். அவர் நடித்த படங்களிலும் டைட்டில் கார்டில் இளைய தளபதி என்று வந்தது. இதற்கிடையில் தான் விஜயின் அப்பா எஸ் ஜே சி அவர்கள் இந்த டைட்டிலை விஜய்க்கு சூட்டிவிட்டார். இதுதான் உண்மை. இப்போ விஜய் தளபதி ஆகிவிட்டார். நாங்கள் திரும்பவும் அந்த இளைய தளபதி பட்டத்தை சரவணனுக்கு வற்புறுத்தி கொடுத்து இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்கள். இதை அடுத்து நடிகர் சரவணன் கூறியது, விஜய் படத்தில் இளைய தளபதி என்ற பட்டத்தை பார்த்ததுமே எஸ்ஏ சந்திரசேகர் ஆபீஸ்க்கே சென்று ஏன் டைட்டிலை பயன்படுத்தினீர்கள் என்றெல்லாம் கேட்டோம்.

Advertisement

தளபதி பட்டம் குறித்து சரவணன் சொன்னது:

அதற்கு அவர் உங்களுக்கு படம் வந்தால் நீங்கள் போட்டுக்கோங்க என்று சொன்னார். அதே நேரம் அடுத்தடுத்து விஜய் படங்களில் இளையதளபதி என்று போட்டுக் கொண்டே வந்ததார். ஆனால், எனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. அதற்குப் பிறகு நானும் ஒதுங்கி விட்டேன். மேலும், உனக்கு படம் அமைந்தால் பட்டதை போட்டுக்கோ என்று அவர் சொன்னது அதற்கு பிறகு தான் எனக்கு புரிந்தது. இப்போ எதுக்கு என் ரசிகர்கள் வைத்த போஸ்டர்களை கிழிக்கணும் என்று சரவணன் பேசியிருக்கிறார். ஆக மொத்தம் இளைய தளபதி பட்டம் முதலில் சரவணனுக்கு வைத்து இருக்கிறார்கள். தற்போது சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய் இளைய தளபதி பட்டம் சர்ச்சை இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement