பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருப்பது சரவணன் தான். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவரான சரவணன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார். ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இவரை சித்தப்பு என்று அழைத்து மிகுந்த மரியாதையையும் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரவணன் பெண்களை குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேரன் விஷயத்தில் பொய் சொன்ன மீராவிற்காக குறும்படம் ஒன்று ஒளிபரப்பபட்டது. அந்த குறும்படம் மூலம் சேரன் எந்த தவறும் செய்யவில்லை என்பதை உறுதி செய்தார் கமல். மேலும், மீராவிற்கு அறிவுரை வழங்கிய கமல், நீங்கள் இப்படியெல்லாம் குற்றச்சாட்டுகளை எல்லாம் வைத்தால், நீங்கள் பேருந்தில் எல்லாம் போகவே முடியாது.

Advertisement

அதில் பெண்களை உரசுவதற்கு என்றே சிலர் வருவார்கள் என்று கூறினார். இதற்கு சரவணன் ‘நானும் காலேஜ் படிக்கும் பொது செஞ்சி இருக்கேன் சார்’ என்று கூறினார். பல கோடி பேர் பார்க்கும் ஒரு பொது நிகழ்ச்சியில் பெண்களை குறித்து இப்படி பேசியதால் சரவணன் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

இதனால் சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது(இதனால் தான் இம்முறை சரவணன் நாமினேஷனில் இடம்பெறவில்லையோ ). இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் சரவணனை கன்பெஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ் சரவணனின் இந்த கருத்திற்கு நிபந்தனையின்றி பகிரங்க மன்னிப்பு கேட்க சொன்னார்.

Advertisement

இதனால் மன்னிப்பு கேட்ட சரவணன், நான் கல்லூரி படிக்கும் போது உண்மையாக பெண்களை பேருந்தில் உரசியுள்ளேன். ஆனால், அது தவறு என்பதை பின்னர் உணர்ந்து என்னை போல யாரும் செய்ய வேண்டாம் என்று தான் கூற முயன்றேன். ஆனால், நான் சொல்ல வந்த கருத்தை முழுமையாக சொல்ல முடியாமல் போனது.

Advertisement

இருப்பினும் நான் சொன்ன கருத்து தவறு தான் இதனால் யாராவது காயப்பட்டிருந்தால் நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள்கிறேன். ஆனால், நான் சிறு வயதில் தவறு செய்தேன், அதனை யாரும் செய்யதீர்கள் என்பதை நான் இப்போதும் சொல்லுவேன். அதற்காக தான் நான் கமல் சார் பேசும் போது கை தூக்கினேன் என்று கூறியிருந்தார்.

Advertisement