பிக்பாஸ்-2வை தொகுத்து வழங்கப்போவது இந்த நடிகரா..? குஷியில் ரசிகர்கள் -புகைப்படம் உள்ளே

By Ajju · 16/3/2018
கடந்த ஆண்டு விஜய் டிவியில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் தான் அரசியலுக்கு வரப்போவதாக மறைமுகமாக அறிவித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் 11 சீஸன்களை கடந்து சென்றிருக்கிறது.ஆனால் தற்போது தான் தமிழில் பிக் பாஸின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மிகவும் பிரபலமான நடிகர்களையே அணுகிவந்தனர் . இதன் இரண்டாம் பாகத்தை தொகுத்து வழங்க முதலில் விஜய் டிவியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நடிகர்கள் சூர்யா, அறிவிந்தசாமி ஆகிய நடிகர்களில் ஒருவர் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வந்தது. ஆனால் தற்போது முதல் சீஸனை தொகுத்து வழங்கிய கமலஹாசனே இந்த சீஸனையும் தொகுத்துவழங்க இருப்பது உறுதியாகியுள்ளது.தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ள கமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் தனது அரசியல் கருத்துக்களை நேரடியாக பரிமாற இந்த மேடையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full