பிக் பாஸ் 1 விளம்பரத்தில் வந்துள்ள பிக் பாஸ் 4 போட்டியாளர் - யாருனு நீங்களே பாருங்க.

By Rajkumar · 17/7/2021

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். இந்த சீசனில் சோம், பாலாஜி, சம்யுக்தா என்று ரசிகர்களுக்கு பரிட்சியமில்லாத பலர் போட்டியாளர்களாக கலந்துகொண்டு இருந்தனர்.

https://www.youtube.com/watch?v=_cs6AmFjpxY

அதில் இறுதி போட்டி வரை வந்த சோம் சேகரும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சோம் சேகரின் என்ட்ரியை பார்த்த போது யார் இவர்கள் என்று தான் அனைவரின் மனதிலும் ஓடியது. ரசிகர்களுக்கு வேண்டுமானால் சோம் சேகர் புதிதான நபராக இருக்கலாம். ஆனால் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே வந்திருக்கிறாராம்.கடந்த 2010ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

அந்த நிகழ்ச்சி விஜய்யை சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. அதே போல அந்த நிகழ்ச்சியில் இவர் இறுதி போட்டி வரை வந்தார். அதன் பின்னர் இவரை விஜய் டிவியில் காண முடியவில்லை. மேலும், இவர் அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்திருக்கிறார்.மேலும் .பல்வேறு விளம்பர படங்களில் கூட நடித்திருக்கிறாராம். ஆனால், இவருக்கு சின்னத்திரையிலும் சரி, வெளியிலும் சரி சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

இதனால் தனது பாதையை கொஞ்சம் மாற்றிய சோம் சேகர் MMA எனப்படும் மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் எனப்படும் குத்து சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த விளையாட்டில் இருந்து வருகிறாராம் சோமசேகர்.இவர் வேலையில்லா பட்டதாரி 2, பா பாண்டி, சூரரை போற்று போன்ற பல்வேறு படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் சோம் சேகர் பிக் பாஸ் சீசன் 1 ப்ரோமோவில் நடித்துள்ளதாக கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full