பிக் பாஸ் சீசன் 4 - பரிந்துரையில் இருக்கும் 4 குக்கு வித் கோமாளி பிரபலங்கள் இவர்களா?

By Rajkumar · 2/5/2020

இந்தியா முழுவதும் பல மொழிகளில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. மூன்று வருடங்களை தொடர்ந்து வெற்றிகரமாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. மூன்று வருடங்களாக இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை தேர்வு செய்து வருகிறார்கள்.ஏப்ரல், மே வில் ஐபிஎல் முடிந்தவுடன் ஜூன் மாதம் என்று சொன்னவுடன் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். சீசன் 1 ஆரம்பித்த போது பிக்பாஸ் நிகழ்ச்சி வேற லெவல்ல போனது. சீசன் 2வை விட சீசன் 3 நிகழ்ச்சி பட்டையை கிளப்பியது. தற்போது மே, ஜூன் மாதம் வரப்போவதால் சீசன் 4க்கான டைம் வந்து விட்டது.

இந்நேரத்துக்கு பிக் பாஸ் போட்டியாளர்களை எல்லாம் தேர்வு செய்திருப்பார்கள்.இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்வதற்காக பல பிரபலங்கள் இடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 படப்பிடிப்பு இரண்டு வருடங்களாக இழுத்து கொண்டிருப்பதால் உலகநாயகன் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்பது தெரியவில்லை

ஹீரோ, ஹீரோயின்கள், காமெடியன், கிளாமர் ஆக ஒரு பிரபலம், வீட்டோடு பெரியவங்க என்று இப்படித் தான் பிக் பாஸ் போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பார்கள்.சமீபத்தில் கூட பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொள்ளபோகும் போட்டியாளர்களின் லிஸ்ட் ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலானது. இந்த நிலையில் இந்த சீசனில் 4 குக்கூ கோமாளி நிகழ்ச்சி பிரபலங்களின் பெயர் பரிந்துரையில் இருக்கிறதாம்.

அதில் பிரியங்கா ரோபோ சங்கர்,  நடிகை ரம்யா பாண்டியன், சிவாங்கி, புகழ், மணிமேகலை ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பரிந்துரையில் ரம்யா பாண்டியன் நிச்சயம் போட்டியாளராக தேர்ந்தெடுக்கபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இவை அனைத்தும் நம்பகரமான தகவல் கிடையாது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full