பிக் பாஸ் வீட்டின் மேல் படு மாஸாக நின்று கொண்டு இருக்கும் கமல் - வெளியான புதிய ப்ரோமோ வீடியோ.

By Rajkumar · 2/10/2021

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=u938wSqXfPA

கடந்த ஆண்டு கூட பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற செய்திகள் கூட வெளியானது. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தது எண்டிமால் நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்த சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது.

ஆனால், அடுத்த சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருகிறது என்று உறுதியாகிவிட்டது. பிக் பாஸின் 5வது சீசன் நாளை மாலை படு கோலாகளமாக துவங்க இருக்கிறது. ஏற்கனவே பல்வேரு ப்ரோமோக்கள் வெளியான நிலையில் சமீபத்தில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் பிக் பாஸ் வீட்டின் மேல் மாஸாக நின்று கொண்டு இருக்கிறார் கமல்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full