தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கடந்த ஜனவரி மாதம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த ஆண்டு கூட பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற செய்திகள் கூட வெளியானது. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தது எண்டிமால் நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்த சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது.ஆனால், ஐந்தாவது சீஸனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருக்கிறது.

Advertisement

சமீபத்தில் பிக் பாஸ் தொடர்பான அடுத்தடுத்து ப்ரோமோ வெளியாகி இருந்த நிலையில் பிக் பாஸ் 5 எப்போது துவங்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்க இருக்கிறது.ஆனால், இந்த சீசனில் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு 9.30 மணிக்கு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த முறை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாக இருக்கிறதாம். அதே போல கமல் பங்கேற்கும் சனி, ஞாயிறு நிகழ்ச்சி 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது சர்வைவர் நிகழ்ச்சி 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அதே போல ஐபிஎல் தொடரும் மீண்டும் துவங்கிவிட்டதால் இந்த நேர மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement