கோவா கேங், அன்ஷிதா எவிக்ஷன், சௌந்தர்யா அதுக்கு தகுதியே இல்லை - பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜெஃப்ரி எக்ஸ்க்ளுசிவ் பேட்டி
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜெஜெப்ரி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 93 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித், ஜெப்ரி, அன்ஷிதா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
கடந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். அதோடு கடந்த 13 வது வாரத்திற்கான நாமினேசனில் ராணவ், மஞ்சரி வெளியேறி இருந்தார்கள். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்குவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டி, சண்டை, சச்சரவு எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அளித்த பேட்டியில் ஜெஃப்ரி, நிகழ்ச்சிக்கு பிறகு வெளியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அறிமுகம் இல்லாத மனிதர்கள் பலருமே வந்து என்னிடம் என்னிடம் அறிமுகம் இல்லாத பல பேர் வந்து என்னிடம் பேசுகிறார்கள்.
https://www.youtube.com/watch?v=erk1aNhZe4M
ஜெப்ரி பேட்டி:
சில பேர் நான் வெளியில் வந்ததைப் பற்றி ரொம்ப எமோஷனல் ஆக பேசியிருந்தார்கள். அதையெல்லாம் பார்க்கும் போது நான் சரியாகத்தான் விளையாடி இருக்கிறோம் என்ற திருப்தி எனக்கு கிடைத்திருக்கிறது. நான் சோசியல் மீடியாவில் வரும் கமெண்ட்ஸ் எல்லாம் பார்க்கவே இல்லை. நான் வீட்டுக்குள்ளே யாருக்கும் செல்லமாக இல்லை. வெளியில் இருந்து பார்க்கும்போது உங்களுக்கு அப்படி தெரிந்திருக்கும். ஆனால், நான் வீட்டுக்குள் அப்படியெல்லாம் இல்லை. எல்லோரும் பண்ற தப்பை நான் அவர்களிடமே சொல்லிட்டு இருந்தேன். நான் வீக்கானது தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேற காரணம் என்று நினைக்கிறேன்.
போட்டியாளர்கள் பற்றி சொன்னது:
டாஸ்க் மேல் அதிக கவனம் செலுத்தி இருந்தேன். அதனால் தான் என்னால் என்டர்டையின்மென்ட் பண்ண முடியவில்லை. வீட்டுக்குள் இன்னும் அதிகமாக பாடல்களை பாடி இருக்கலாம் என்று இப்ப தோணுது. அன்ஷிதாவோட எவிக்ஷனுக்கு அவங்க பாசமாக இருந்தது ஒரு காரணமாக சொல்ல முடியாது. அவங்க சில டாஸ்குகளை சரியாக பண்ணவில்லை என்று தான் சொல்லணும். நான் வீட்டுக்குள் இருந்திருந்தால் டிக்கெட் டூ பினாலே வென்று இருப்பேன். எனக்கு என் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கு. பவித்ராவும் டிக்கெட் டூ பினாலே தகுதியானவர்கள் தான். அவங்க டாஸ்க் சரியாக பண்ணாத மாதிரி வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியும். ஆனால், மனதளவிலும் உடலளவிலும் ரொம்ப வலிமையானவர் பவித்ரா.
டைட்டில் வின்னர்:
நான் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் போனால் ஆட்டம் எப்படி இருக்கும் என்று தெரியும். அதேபோல் டாஸ்க் அடிப்படையில் சௌந்தர்யா தகுதியானவர்கள் கிடையாது. அவங்க டாஸ்க்கில் பெருசாக எதுவுமே பண்ணவில்லை. நான் வீட்டுக்குள் இருக்கும்போது கோவா கேங்க்கில் இருந்திருக்க கூடாதுன்னு பீல் பண்ணி இருக்கேன். அது கேம் கெடுக்கிற மாதிரி இருந்தது. அதுமட்டுமில்லாமல் ராணவ் கீழே விழுந்த சமயத்தில் அவன் நடிக்கிறான் என்று நான் சொல்லிருக்கக் கூடாது. பைனல் கட்டத்துக்கு தீபக், பவித்ரா, அருண், சௌந்தர்யா போவாங்கன்னு நினைக்கிறேன். என்னுடைய கணிப்பில் பவித்ரா கண்டிப்பாக டைட்டில் அடிப்பாங்க என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.