இதோ ஆரம்பிச்சாச்சு பிக் பாஸ் சீசன் 9 , எப்போ? தொகுப்பாளர் யார்? பிரபலம் கொடுத்த அப்டேட்

By subhashini · 16/8/2025

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் ஹிந்தியில் தான் ஒளிபரப்பி இருந்தார்கள். அதற்குப் பிறகு தான் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுவரை எட்டு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சி பல பேரின் கேரியருக்கு துணையாக இருக்கிறது. ‌ பலரின் வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம்.

பிக் பாஸ் நிகழ்ச்சி:

இந்த பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. முதல் ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். கடந்த ஆண்டு கமல் தனது இன்ஸ்டாகிராமில், தற்காலிகமாக இந்த பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா கமிட்மெண்ட்ஸ் காரணமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என்று தெரிவித்து இருந்தார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பின் கடந்த எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், முதல் சீசனில் ஓவியா டைட்டில் பெற்றிருந்தார். இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசன் ராஜி, ஆறாவது சீசனில் அசிம், ஏழாவது சீசனில் அர்ச்சனா, கடைசியாக எட்டாவது சீசனில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆகியிருந்தார்கள். கடந்த எட்டாவது சீசனில் பிக் பாஸ்-சுமால் பாஸ் என்று இரண்டாக பிரித்து வித்தியாசமாக நடத்தி இருந்தார்கள்.

பிக் பாஸ் சீசன் 9:

இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி குறித்து அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது மூன்று சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடந்தது. கொரோனாவிற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டது. அக்டோபரில் தொடங்கி ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வரை நடத்தப்பட்டது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முன்கூட்டியே ஆரம்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சி அப்டேட்:

அதாவது செப்டம்பர் மாதத்திலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் Jio Star-ன் தென்னிந்திய தலைமை அதிகாரி கிருஷ்ணன் குட்டி சமீபத்தில் அளித்த பேட்டியில், பிக் பாஸ் 9 நிகழ்ச்சி அக்டோபர் முதல் தொடங்க இருக்கிறது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்று கூறியிருக்கிறார் . தற்போது போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full