மூன்றாவது முறையாக பிக் பாஸ் பட்டத்தை வென்ற பெண் போட்டியாளர் - யார் தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 106 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, திவாகர், கலையரசன், பிரவீன், துஷார், கெமி, ப்ரஜன்,ரம்யா, வியானா, எப் ஜே மற்றும் ஆதிரை, அமித், கனி, சுபிக்ஷா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 9:
மேலும், டிக்கட் டூ பினாலே டாஸ்க்கில் அரோரா வெற்றி பெற்றிருந்தார். பின் இந்த நிகழ்ச்சியில் நடந்த கார் டாஸ்க்கில் சான்ட்ராவை காரில் இருந்து பார்வதி- கம்மு இருவரும் சேர்ந்து கால், கையில் தள்ளியும் உதைத்தும் கீழே தள்ளி விட்டிருந்தார்கள். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையாகி இருந்தது. பின் விஜய் சேதுபதி, பார்வதி- கம்மு இருவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி இருந்தார்.
பணப்பெட்டி டாஸ்க்:
பிக் பாஸ் வீட்டில் வினோத், விக்ரம், சபரி, சான்ட்ரா, அரோரா, திவ்யா ஆகியோர் இருந்தார்கள். இதில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார். இவர் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு வெளியேறியது பலருக்குமே அதிர்ச்சி தான். அதன் பின் கடந்த வாரம் சாண்ட்ரா தான் வெளியே சென்றார். இந்த நிலையில் இப்பிற்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் உடைய கிராண்ட் பின்னாலே சுற்று நடைபெற்று இருக்கிறது.
டைட்டில் வின்னர்:
இதில் முதல் இடத்தை பிக் பாஸ் டைட்டில் பட்டத்தையும் திவ்யா கணேஷ் பெற்றிருக்கிறார். இதுவரை
டைட்டில் பெற்றதை மூன்றாவது முறையாக பெண் போட்டியாளர் பெற்று இருக்கிறார். அதோடு இரண்டாவது முறையாக வைல்ட் கார்ட் போட்டியாளர் டைட்டில் பட்டதை வென்றிருக்கிறார். இரண்டாவது இடத்தை சபரி பெற்றிருக்கிறார். மூன்றாவது இடத்தை விக்ரம், நான்காவது இடத்தை அரோரா பெற்றிருக்கிறார்.