நடிகரும் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரான சென்ராயன் தனது மகனுக்கு ராஜராஜசோழன் வம்சாவழியில் பெயரை வைத்திருக்கிறார். நடிகர் சென்ராயன், தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதிலும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களில் பேராதரவை பெற்று மேலும் பிரபலமடைந்தார்.

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சென்ராயன், அதன் பின்னர் ஆடுகளம், சிலம்பாட்டம், மூடர் கூடம் என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சினிமாவை விட அதிகம் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். சினிமாவில் காமெடி முகத்தை பார்த்த நமக்கு இவரது சீரியசான மறுபக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் தெரிந்தது.

Advertisement

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சென்றாயன், பொல்லாதவன் படத்தின் போது நடந்த சுவாரசியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அந்த பேட்டியில் பேசிய சென்றாயன், பொல்லாதவன் படத்தில் நடிக்கும் போது தான் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலைசெய்தேன். அந்த நிறுவனத்தில் உரிமையாளர் 200 டிக்கெட்டுக்களை தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக வாங்கியி வைத்திருந்தார். ஆனால் படம் ரிலீஸ் ஆனபோது குடும்ப பிரச்சனை காரணமாக அவர் ஆந்திரா செல்லும் சூழ்நிலைஏற்பட்டுவிட்டது .

இதனால் அனைத்து டிக்கெட்டுகளையும்என்னிடம் கொடுத்துவிட்டு உன் நண்பர்களுடன் படம் பார் என கூறிவிட்டு சென்றுவிட்டார். இதனால் என் நண்பர்களுக்கும் போக மீதி டிக்கெட்டை பிளாக்கில்விற்றேன், என் படத்திற்கு நானே பிளாக்கில் டிக்கெட் விற்றது எனக்கு பெருமை என்று கூறியுள்ளார். மேலும், நடிகர் சென்ராயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது, தனது குழந்தைக்கு செம்பியன் என்று பெயர் வைத்துள்ளார்.

Advertisement
Advertisement