பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் அழுத சென்ராயனுக்கு பிறந்த இரண்டு மகன்கள் - ப்பா, எப்படி வளந்துட்டாங்க.

By Rajkumar · 19/7/2022

பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த சென்றாயனுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. தற்போது முதல் முறையாக தனது மகன்களை காட்டி இருக்கிறார் சென்றாயன். நடிகர் சென்ராயன், தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதிலும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களில் பேராதரவை பெற்று மேலும் பிரபலமடைந்தார்.

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சென்ராயன், அதன் பின்னர் ஆடுகளம், சிலம்பாட்டம், மூடர் கூடம் என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதுவும் இவர் ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் வில்லனாக நடித்து பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தார். ஆனால், இவருக்கு வில்லன் கெட்டப் சுத்தமாக காய்கொடுக்கவில்லை. அதன் பின்னர் படங்களில் தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இதையும் பாருங்க : விஜே அஞ்சனா வீட்டில் திடீர் இழப்பு,, கதறி அழுத அஞ்சனா. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்.

வில்லனாக நடித்த சென்ராயன் :

ஆனால், இவரால் ஒரு முன்னனி காமெடியனாக வலம்வர முடியவில்லை. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவருக்கு இடையில் சரியாக இவருக்கு சினிமாவை விட அதிகம் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். சினிமாவில் காமெடி முகத்தை பார்த்த நமக்கு இவரது சீரியசான மறுபக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் தெரிந்தது.அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஐஸ்வர்யாவுடன் சண்டை போட்டது பெரும் பிரபலமானது.

சென்ராயன் திருமணம் :

சென்ராயன், சினிமாவிற்கு வருவதர்க்கு முன்பே திருமணம் செய்து கொண்டார். மேலும், திருமணம் முடிந்து இவருக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தான் இருந்து வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது தனக்கு குழந்தை இல்லை. அதனால் அனாதை குழந்தைகளை தத்தெடுக்க போவதாக கூறியிருந்தார் சென்றாயன். அதன் பின்னர் கமலும் கண்டிப்பாக அடுத்த  வருடத்திற்குள் உங்கள் மனைவிக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியிருந்தார்.

குழந்தை இல்லாமல் அழுத சென்ராயன் :

பின்னர் கமல் கூறிய வாக்கு பலித்தது போலவே சென்றாயன் மனைவி கருவுற்றார். அதிலும் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போதே அவர் மனைவி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்ன போது 'நான் அப்பா ஆகிட்டேன் டா ' என்று ஆனந்த கண்ணீரில் கதறி அழுதது பலரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. சென்ராயன் மனைவிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

சென்ராயன் மகன்கள் :

அதே போல பேட்டி ஒன்றில் பங்கேற்ற சென்றாயன், அவருக்கு செம்பியன் என்று பெயரை வைத்து இருக்கிறேன் என்று கூறி இருந்தார். அதை தொடர்ந்து இவருக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது. இறுதியாக பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தன் இரண்டு மகன்களை அழைத்து வந்து இருந்தார் சென்ராயன். இப்படி ஒரு நிலையில் சென்ராயன் தனது இரண்டு மகன்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.


Tamil Behind Talkies AMP · Quick view
View full