ஏழாம் வார நாமினேஷன் - யார் யாரை நாமினேட் செய்தார்கள் தெரியுமா ? முழு லிஸ்ட்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஆறு வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்ட் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார்கள். தற்போது இருக்கும் நிலையில் 15 போட்டியாளர்களும் அப்படியே இருக்கின்றனர். ஆனால் 6வது வாரம் நிறைவேறிவிட்டது. இந்த ஆறு வாரத்தில் வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு பெரிய பிரச்சனை வெடித்து விடுகிறது.
அதே போல இந்த வாரம் நடைபெற்ற பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் பல பிரச்சனைகள் வெடித்தது. அதிலும் பல இடங்களில் சுச்சத்ரா செய்த நாரதர் வேலைகளால் பல குழப்பங்கள் ஏற்பட்டது. இது ஒரு புறம் இருக்க நேற்றய நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட 3 போட்டியாளர்களாக நிஷா, ஆஜீத், கேப்ரில்லா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் டாஸ்க் மூலம் ஆஜீத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த வாரம் முழுக்க தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஒரே கொண்டாட்டமாக தான் சென்றுக்கொண்டு இருந்தது. இதனால் வீட்டில் பெரிதாக பிரச்சினைகள் ஏற்படவில்லை அதே போல தீபாவளி சிறப்புச் சலுகையாக கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வாரம் கண்டிப்பாக எலிமினேஷன் இருக்கும் என்று கமல் கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது.
யார் யாரை நாமினேட் செய்தார்கள் :
ஷிவானி - சுசித்ரா, அனிதா
சோம் - சுசித்ரா,பாலாஜி
நிஷா - சுசித்ரா, அனிதா
ரம்யா - சுசித்ரா, அனிதா
அர்ச்சனா - சுசித்ரா, அனிதா
ரமேஷ் - சுசித்ரா, அனிதா
சம்யுக்தா - சுசித்ரா, அனிதா
ரியோ - சுசித்ரா,அனிதா
ஆஜீத் - சுசித்ரா, ஆரி
கேப்ரில்லா - அனிதா, சம்யுக்தா
சனம் - ரியோ, சோம்
ஆரி - ரியோ, பாலாஜி
அனிதா - சம்யுக்தா
பாலாஜி - சோம், ஆரி
சுசித்ரா - அர்ச்சனா,
இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ரியோ, பாலா, சம்யுக்தா, சோம், ஆரி, அனிதா, சுசித்ரா ஆகிய 7 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் கண்டிப்பாக அனிதா அல்லது சுசித்ரா இருவரில் யாரவது வெளியேறுவார்கள் என்பது தான் பலரின் கணிப்பாக இருந்து வருகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்.