'அங்க நான் தம் அடிக்கனும்னு' - பிக் பாஸில் தம் அடித்தது குறித்து ஷகீலா கொடுத்த விளக்கம்.

By subhashini · 13/10/2023

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிகரெட் பிடித்த சர்ச்சை குறித்து ஷகிலா கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். ஏன்னா, போதும் போதும் என்ற அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை.

இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். பின் இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லலாம். இவருடைய கவர்ச்சி படங்களுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை. மேலும், ஷகீலா தனது வாழ்கை வரலாற்றை படமாக எடுத்து இருக்கிறார்.

ஷகீலா திரைப்பயணம்:

மேலும், இளமை போன பின்னரும் இவர் பல படங்களில் நடித்து இருந்தார். கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். கடந்த இரண்டாம் சீசனில் ஷகீலா போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதில் இவர் மிக திறமையாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

பித் பாஸ் நிகழ்ச்சியில் ஷகீலா:

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஷகீலா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அது மட்டுமில்லாமல் சமூகம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு சகிலா குரல் கொடுத்து வருகிறார். இதனை அடுத்து சமீபத்தில் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக சகிலா கலந்து கொண்டிருந்தார். ஆனால், இவர் உள்ளே சென்ற வேகத்திலேயே வெளியே வந்து விட்டார்.

ஷகீலா சிகரெட் பிடித்த சர்ச்சை:

மேலும், இவர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது சிகரெட் பிடித்து இருந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் சகிலா பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர், எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நபருக்கு கூட ஒரு பழக்கம் இருக்கும். அப்படித்தான் எனக்கும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. தெலுங்கு பிக்பாஸில் புகை பிடிப்பதற்கென்று ஒரு அறை கிடையாது. அதனால் தான் நான் கிடைக்கும் இடத்தில் அமர்ந்து புகைப்படத்தேன்.

ஷகீலா கொடுத்த விளக்கம்:

தனியாக அறை இருந்தால் நான் ஏன் வெளியே உட்கார்ந்து புகை பிடித்து இருப்பேன். அதோட நான் சிகரெட் பிடிக்கும் போது ஒரு கவர் போடுங்கள் என்றெல்லாம் கோரிக்கை வைத்தேன். ஆனால், பிக் பாஸ் அதை செய்யவில்லை. எனக்கு ஃபிரெண்டு என்று சொன்னால் அது சிகரெட் தான். 30 வருடங்களாக என் கூட சிகரெட் இருக்கிறது. அதை என்னால் விட முடியவில்லை. நான் ஒரு நாளைக்கு நிறைய சிகரெட் பிடிப்பேன். ஆனால், நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு பத்து சிகரெட் தான் கொடுத்தார்கள். சிகரெட் பிடிக்க இல்லை என்றால் நான் தூங்க மாட்டேன். இதனால் அடம் பிடித்து தான் நான் சிகரெட் வாங்கினேன் என்று வெளிப்படையாக பேசியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full