பிக் பாஸ் வீட்டில் இன்று வெளியேறப்போவது இவர் தான்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

By Ajju · 5/8/2018
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் பாலாஜி, பொன்னம்பலம், மஹத், ரித்விகா,மும்தாஜ், ஷாரிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் இந்த வாரம் யார் வெளியேற்றபடுவார் என்று மக்கள் அனைவரும் எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த வாரம் வெளியேற போகும் நபர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போதய நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் நபர்களில் ரித்விகா மற்றும் ஷாரிக்கை தவிர்த்து மீதமுள்ள 4 பேரும் ஏற்கனவே நாமினேஷனில் இருந்தவர்கள் தான். அதில் பொன்னம்பலம், பாலாஜி, மும்தாஜ் ஆகியோர் பல முறை நாமினேஷனில் வந்து பின்னர் மக்களால் காப்பாற்றபட்டனர்.இதனால் இந்த வாரமும் இவர்கள் சேபாக இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் ஷாரிக் வெளியேற்படுகிறார் என்ற அதிகாரபூர்வ தகவல் கிடைத்துள்ளத. மேலும், இந்த பிக் பாஸ் செட்டில் ஷாரிக்கின் அம்மாவன நடிகை உமா ரியாஸ் வந்துள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இதன் மூலம் இந்த வாரம் ஷாரிக் தான் வெளியேற்றபடுவாரோ என்று நம்பப்பட்ட நிலையில் தற்போது ஷாரிக்கின் வெளியேற்றம் உறுதியாகியுள்ளது. இந்த வாரம் நடைபெற்ற வாக்களிப்பில் ஷாரிக் இருப்பதிலேயே கம்மியான வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வாரம் வாக்களிப்பின் போது மஹத் மற்றும் ஷாரிக்கிற்கு இடையே தான் போட்டி நிலவியதாக தெறிகிறது . ஆனால், ஷாரிக் கடந்த சில நாட்களாக தான் பிக் பாஸ் வீட்டில் ஆக்ட்டிவாக இருந்து வந்தார். மேலும், அவர் இவரால் நிகழ்ச்சிக்கு எந்த ஒரு ஸ்வாரஸ்யமுயம் ஏற்படவில்லை. எனவே, இந்த வாரம் ஷாரிக்கை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவெடுத்து விட்டார்களோ என்று எண்ணம் தோன்றுகிறது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full