நேற்று வனிதாவை கமல் கலாய்த்த போதெல்லாம் கை தட்டிய நபர்.! இவங்க யாரு தெரியுமா.!

By Rajkumar · 8/9/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவிற்கு சற்றும் சளைக்காத நபராக இருந்து வருகிறார் வனிதா. அதனால் தான் என்னவோ மக்கள் இவரை ஓட்டு போட்டு வெளியே அனுப்பிய பின்னரும் இவரை மீண்டும் வயல்கார்டு போட்டியாளராக பிக்பாஸ் அழைத்து வந்துள்ளார். மேலும், இவரை மீண்டும் அழைத்து வந்ததற்கு பிரயோஜனமாக பிக்பாஸ் வீட்டில் இவர் சென்ற நாள் முதலே பல்வேறு சண்டைகளையும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார். இதனால் அடிக்கடி கமலிடம் நோஸ்கட் வாங்கி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷெரின் மற்றும் தர்ஷன் இருவர் உறவு குறித்து வனிதாவுக்கும் ஷெரினிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஷெரினிடம், தர்ஷனுக்கு வெளியில் காதல் இருக்கும் போது நீ தர்ஷனிடம் இப்படி பழகினால் அதற்கு பெயர் கள்ளத்தொடர்பு தான் என்று கூறியிருந்தார் வனிதா. இதனால் கடும் கோபமடைந்த ஷெரின் வனிதாவிடம் சண்டை போட்டார். வனிதா இப்படி சொன்னது ரசிகர்களை கூட முகம் சுளிக்க வைத்தது. மேலும், இந்த விஷயத்தில் தர்ஷனும் வனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையும் பாருங்க : வனிதாவால் சொல்ல வந்ததேயே மறந்த கமல்.! இன்னிக்கும் வெச்சி செய்ய போகிறார் போல.!

கடந்த சில வாரமாகவே வனிதாவை வச்சு செய்து வருகிறார் கமல். அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் வனிதா மற்றும் வனிதா பஞ்சாயத்து கமலுக்கு கிடைத்ததால் கமலுக்கு பஞ்சாமிர்தம் கிடைத்தது போல ஆகிவிட்டது. இதனால் நேற்றைய நிகழ்ச்சியில் வனிதாவை கமல் வச்சி செய்தார். கமல், வனிதாவை கலாய்க்கும் போதெல்லாம் அடிக்கடி ஒரு பெண் கைதட்டிக் கொண்டே இருந்தார். அது வேறு யாருமில்லை சரின் இன்தாயார் தான்.

ஆனால் தனது தாயார் நேற்று நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார் என்பதுஷெரீனுக்கு தெரியுமா, தெரியாதா என்பது தெரியவில்லை. அதேபோல இந்த வாரம் ஷெரின் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளதால் ஒருவேளை இந்த வாரம்ஷெரின் வெளியேற்றப்படலாம் என்று அவரது தாயார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full