பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஷெரினா, மிகவும் வித்யாசமான Elimination Cardஐ காட்டி வெளியேற்றப்பட்டு இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 4 வாரங்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வார நாமினேஷனின் விக்ரமன், அசீம், Vj கதிரவன், ஆயிஷா, ஷெரினா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இதில் நேற்று ஷெரினா வெளியேற்றப்பட்டார். அதுவும் elimination Cardல் அவரது பெயர் மலையாளத்தில் எழுதப்பட்டு அவரை மிகவும் தர்மசங்கடத்தில் தள்ளியது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல வித்திருமுறைகள் இருக்கிறது.பிக் பாஸ் வீட்டில் வன்முரையில் ஈடுபடக்கூடாது, ஆபாசமாக பேசக்கூடாது, மைக்கை பாத்ரூம் செல்லும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கழட்ட கூடாது. இப்படி பல விதி முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கிய விதியாக இருந்து வருவது போட்டியாளர்கள் யாரும் தமிழைத் தவிர வேறு எந்த மொழிகளிலும் உரையாடக்கூடாது.

Advertisement

அதற்கு முக்கிய காரணம் எந்த நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களுக்காக ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சியாகும் இதனால் போட்டியாளர்கள் பேசிக்கொள்ளும்போது பெரும்பாலும் தமிழில் தான் பேச வேண்டும் என்பதுதான் முக்கிய விதியாக இருந்து வருகிறது.ஆனால், இந்த நிகழ்ச்சியில் தமிழ் பேசும் போட்டியாளர்களை தவிர பிற மொழி பேசும் போட்டியாளர்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அவர்களையும் மீறி ஆங்கிலத்திலையோ அல்லது அவர்களின் தாய் மொழிகளிலேயோ பேசுவது வழக்கமான ஒரு விஷயம் தான்.

அப்படி தொடர்ந்து பேசும்போது அவர்களை பிக் பாஸ் நிச்சயம் எச்சரிப்பார். அதேபோல பிற மொழி பேசும் போது தமிழ் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவார்கள்.ஆயிஷா மற்றும் ஷெரினா இருவரும் மலையாளத்தில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த உரையாடலில் மற்ற போட்டியாளர்கள் குறித்து அவர்கள் இருவரும் விவாதித்துக் கொண்டு இருந்தார்கள். இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே தமிழில் பேச வேண்டும் என்று பிக் பாஸ் எச்சரித்து இருந்தார்.

Advertisement

ஆனாலும், அடிக்கடி ஆயிஷா மற்றும் ஷெரினா இருவரும் மலையாளத்தில் பேசிக்கொண்டு தான் இருந்தனர். இதனை கடந்த வாரம் கமல் சுட்டி காட்டிய போது ‘இது தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி அதனால் தமிழில் தான் பேச வேண்டும்’ என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் ஷெரினா வெளியேற்றப்பட்டார். அதுவும் Elimination Cardல் அவரது பெயர் மலையாளத்தில் எழுதப்பட்டு இருந்ததை கண்டு ஷெரினா தர்ம சங்கடத்திற்கு உள்ளானர்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் ஷெரிநா வெளியேறிய பின்னர் அவருக்கு அறுதல் தெரிவித்து நெட்டிசன்கள் பலர் பதிவுகளை போட்டு வருகின்றனர். நேற்றய நிகழ்ச்சியில் ஷெரினா வெளியேறிய போது அவர் பெரிதாக யாரிடமும் பேசவில்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முன்னர் ‘நான் தனியாவே வந்தேன், தனியாவே போறேன்’ என்று சொன்னது பலரை கொஞ்சம் அவர் மீது பாவபட்டனர்.

கமல் முன் பேசிய போது கூட தனது பயண வீடியோவை கண்டு மிகவும் கண் கலங்கினார் ஷெரினா. இதை கண்ட ரசிகர்களே பாவம் என்று தான் கூறி வந்தனர். அதோடு அவர் மலையாளத்தில் பேசியது தவறு தான் ஆனாலும் அவரை இவ்வளவு அசிங்கப்படுத்தி இருக்க வேண்டாம் என்று நெட்டிசன்கள் ஷெரினா வெளியேற்றத்திற்கு பின் அவருக்கு ஆதரவாக பதிவுகளை போட்டு வருகின்றனர்.

மற்ற மொழியில் பேசக்கூடாது என்றால் ஏன் மற்ற மொழி போட்டியாளர்களை அழைக்க வேண்டும் என்று சிலர் கூறி வந்தாலும் அதே போல ஷெரினா வெளியேற்றத்திற்கு காரணம் அவர் மலையாளத்தில் பேசியது மட்டுமல்ல அவரின் டிராமாவும், நிகழ்ச்சிக்கும் மக்களுக்கும் மதிப்பு கொடுக்காததுதான் காரணம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இருப்பினும் ஷெரினாவை தவிர மற்ற யாரும் வேறு மொழில் பேசுவது இல்லையா என்ன ?

Advertisement