நீங்களும் இங்க தான் இருக்கீங்களா ? ஷிவானி பதிவிட்ட அதே நேரத்தில் பாலாஜி பதிவிட்ட புகைப்படம்.

By ·

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஒரு காதல் கதை இடம் பெற்றுவிடும் முதல் சீசனில் ஓவியா -ஆரவ் இரண்டாவது சீசனில் மகத் மற்றும் யாஷிகா மூன்றாவது சீஸனில் அபிராமி - முகேன், கவின்- லாஸ்லியா, தர்ஷன்- ஷெரின் என்று பல காதல் கதைகள் ஓடியது. அதே போல தான் இந்த சீசன் ஆரம்பத்தில் பாலாஜி மற்றும் கேபி இருவருக்கும் காதல் இருப்பது போல காண்பிக்கப்பட்டது. ஆனால், அது எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. மேலும், ஷிவானி - பாலா காதல் கதையும் ஒர்க் அவுட் ஆகவில்லை.

அதிலும் ஷிவானியின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே வந்தே போது ஷிவானிக்கு அவர் விட்ட டோஸை பார்த்து இனிமேல் ஷிவானி, பாலாஜி பக்கம் தலைவைத்து கூட படுக்க மாட்டார் என்று தான் பலரும் நினைத்தார்கள். ஆனால், அதன் பின்னரும் பாலாஜியிடம் சகஜமாக தான் பேசி வந்தார் ஷிவானி. சமீபத்தில் கூட தனது நாய் குட்டிக்கு பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இந்த கொண்டாட்டத்தில் பாலாஜி, சம்யுக்தா, ஆஜீத் ஆகியோரும் கலந்துகொண்டு இருந்தனர் .

சமீபத்தில் ஷிவானி, மாலத்தீவுக்கு வெக்கேஷன் சென்றுள்ளார். அங்கே நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், ஷிவங்கியுடன் அவரது அம்மாவும் சென்றுள்ளார். இப்படி ஒரு நிலையில் பாலாஜியும் நிச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதுவும் ஷிவானி இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவிட்ட அதே நேரத்தில் பாலாஜியும் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் நீங்களும் அங்க தான் இருக்கீங்களா என்று கமன்ட் செய்த் வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full