என்ன பத்தி தப்ப பேசறத நம்பாதீங்க - அம்மாவிற்கு ஷிவானி எழுதிய கடிதம். Unseen வீடியோ இதோ.

By Rajkumar · 12/11/2020

சினிமா நடிகைகளும் சரி சின்னத்திரை நடிகைகளும் சரி எத்தனையோ பேர் போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள். அதிலும் சமீபகாலமாக சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் தான் போட்டோ ஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மொட்டைமாடி போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்தவர் ரம்யா பாண்டியன்.இவரை தொடர்ந்து பல்வேறு சீரியல் நடிகைகளின் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துஇருக்கிறார்கள்.

https://twitter.com/vijaytelevision/status/1323897915882926080

அந்த வகையில் சமீபகாலமாக இளசுகளின் ரீசன்ட் இருந்து வருபவர் பிரபல சீரியல் நடிகை யான ஷிவானி நாராயணன். . விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.இந்த தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி. பகல் நிலவு சீரியலுக்கு பின்னர் கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்தார்.கடைக்குட்டி சிங்கம் தொடருக்கு பின்னர் தற்போது ஷிவானி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'ரெட்டை ரோஜா' என்ற தொடரில் நடித்துவந்தார்.

19 வயதான இவர் தனது 14 வயதிலேயே மாடலாக பணியாற்றியிருக்கிறார். மேலும், இவருக்கு பத்தொன்பது வயது தான் ஆகிறதா என்பதை யாரும் நம்ப கூட மாட்டார்கள். அந்த அளவிற்கு அம்மணியின் வளர்ச்சி நடிப்பிலும் சரி உருவத்திலும் சரி நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது. சமூக வலைதளத்தில் இவரை பல லட்சம் பேர் பின் தொடர்ந்து வந்தனர். அது போக இவரது 4 மணி புகைப்படத்திற்கு என்றே பல ரசிகர்களும் இருந்தனர். இதனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவருக்கு பல ஆதரவுகள் இருக்கும் என்று எதிர்பரக்கப்பட்டது.

https://twitter.com/Mysteri13472103/status/1326442785851895808

ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறாரா இல்லையா என்ற அளவிற்கு தான் இருக்கிறார். அதே போல பாலாவிற்கு பணிவிடை செய்யும் பெண் போல தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போட்டியாளர்கள் தங்களது நெருக்கமானவர்களுக்கு எழுதி கடிதத்தை அனைவர் முன்பும் படித்துக் காண்பித்தனர். ஆனால், ஷிவானி படித்துக் காண்பித்ததை ஒளிபரப்பவில்லை. இப்படி ஒரு நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full