சின்னத்திரை வட்டாரத்திலே அதிக விலை காரை வாங்கியுள்ள ஷிவானி - விலை எத்தனை கோடி தெரியுமா ?

By Rajkumar · 13/8/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி ஆனால் இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ ஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம்.சமீபகாலமாகவே நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத்தான் இருந்து வந்தது.

பொதுவாக மாலை நேரத்தில் புகைப்படத்தை பதிவிடும் பிக் பாஸ் நெருங்க இருப்பதால் சதா இன்ஸ்டாகிராமில் தான் குடியிருந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவரது ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்தனர். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் இவர் விளையாடிய விதம் பெரும் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருந்தது.

இதையும் பாருங்க : NINI சீரியலில் இருந்து நான் விலகுகிரேனா ? ரஷிதா சொன்ன ஷாக்கிங் பதில். (மீண்டும் அந்த நடிகை வந்தா நல்லா இருக்கும்)

ஷிவானிக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் குவிந்ததற்கு காரணம் அவருடைய 4 மணி புகைப்படங்கள் தான். ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்கிக்கு பின்னர் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி சினிமா வாய்ப்பு அமையவில்லை. இப்படி ஒரு நிலையில் ஷிவானி புதிய Bmw series 7 சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ரம்யா பாண்டியன் புதிய BMW கார் ஒன்றை வாங்கி இருந்தார். அதன் விலை 55 லட்சத்திற்கு மேல். ஆனால், ஷிவானி வாங்கியுள்ள இந்த BMW series 7 - ன் விலை மட்டும் சுமார் 1.2 கோடிக்கு மேல். இப்படி ஒரு விலையுயர்ந்த காரை சின்னத்திரை வட்டாரத்திலேயே யாரும் வைத்திருக்கவில்லை என்பது கூறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full