'மனசாட்சினு ஒன்னு வேணாமா' - ஷிவானியின் ரஞ்சிதமே பாடல் சான்ஸ்ஸை கண்டு கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

By Arun · 15/11/2022

தமிழ் சின்னத்திரை மற்றும் மாடல் நடிகையான ஷிவானி நாராயணன் கடந்த பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார். இவர் பிக் பாஸில் கலந்து கொள்வதற்கு முன்னர் தன்னுடைய சிறு வயதிலேயே திரைப்பயணத்தை தொடங்கி விட்டார். தமிழ் , தெலுங்கு போன்ற மொழிகளில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட "சரவணன் மீனாட்சி" என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார்.

அதன் பின்னர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "பகல் நிலவு" என்ற சீரியலில் நாயகியாக நடித்திருந்தார். இவற்றின் நடிப்பு ரசிகர்களை கவரவே ஜோடி பன் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதனை தொடந்து ஜீ டிவியில் "இரட்டை ரோஜா" மற்றும் "கடைக்குட்டி சிங்கம்" போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமாகினார் ஷிவானி நாராயணன். இந்நிலையில் தான் கடந்த பிக் பாஸ் 4ல் போட்டியாளர்க்காக கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்திருந்தார்.

ஷிவானி சில மதங்களுக்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான உலகநாயகன் கமல்ஹசன் நடித்திருந்த "விக்ரம்" திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படம் வணீக ரீதியாக பெரிய வெற்றியால் படக்குழுவிற்ற்கு கொடுத்திருந்தது.தற்போது தினமும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவரும் ஷிவானி நாராயணன் கிட்டத்தட்ட 3.5மில்லியன் பின் தொடர்பவர்களை கொண்டுள்ளார்.

https://www.youtube.com/shorts/jIF6Kb_8o3Q

இனைய பிரபலம் :

தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவது மட்டுமில்லாமல் திரைபடடங்களில் படங்களுக்கு நடனமாடி ரீலிஸ் போட்டு வரும் இவரது பதிவிரற்கு லைக்குகள் மளமளவென்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தான் வரும் பொங்கலன்று வெளியாகவுள்ள தளபதி விஜய் நடித்துவரும் திரைப்படத்தின் முதல் பாடலான "ரஞ்சிதமே" வெளியிடப்பட்டது. இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக புஷ்பா பட நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் :

இப்படியிருக்கும் போது இப்பாடலுக்கு பிரபலங்கள் பலரும் ரீலிஸ் செய்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வரும் நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் இந்த பாடலுக்கு நடனமாடி ரீலிஸ் போட்டுள்ளார். இவரின் ரீலிஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி பல லைக்குகளை பெற்று வரும் நிலையில் இவரின் ரசிகர்கள் கடுமையாக திட்டி பதிவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர். அவர்கள் "ஒரு ஹீரோயினி வாய்ப்புக்காக என்னவெல்லாம் பண்ண வேண்டியதா இருக்கு என்றும்` இதனை பார்ப்பதற்கு கேவலமாக இருக்கிறது என்றும் பைத்தியமா நீ" என்று கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full