இந்த ஏழு டாஸ்கின் முடிவின்படி சோம் சேகர் தலா 39 புள்ளிகளை எடுத்து முதல் இடத்தில் இருந்தனர். இருக்கு அடுத்தபடியாக ரியோ 37 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார், அவரை தொடர்ந்து 32 புள்ளிகளுடன் ஷிவானி மூன்றாம் இடத்திலும் இருந்தனர். நேற்றைய ரோப் டாஸ்கில் பாலா முதல் ஆளாக கயிறை விட்டு போட்டியில் இருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து ஆரி, ரியோ, சோம், கேப்ரில்லா ஆகியோர் கயிறைவிட்டு ஒருவர் பின் ஒருவராக வெளியேறினார்கள்.

இந்த டாஸ்கில் நேற்றறு ஷிவானி மற்றும் ரம்யா மட்டும் நிலைத்து நின்றனர். அவர்களின் மன வலிமையை உற்சாகப்படுத்தும் விதமாக பிகில் படத்தில் வந்த சிங்கப்பெண்ணே பாடலை போட்டு உற்சாகப்படுத்தினர். இந்த டாஸ்கில் யார் ஜெயிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்துவந்த நிலையில் இந்த டாஸ்க்கில் ஷிவானி முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த டாஸ்க்கை ஷிவானி 4 மணி நேரம் 48 நிமிட தாக்கு பிடித்துள்ளார் ஷிவானி.

இதையும் பாருங்க : இதெல்லாம் நீங்க நெனச்சி கூட பாக்க முடியாது – நேற்றய டாஸ்க் குறித்து ரம்யா தம்பி பதிலடியுடன் பதிவு.

Advertisement

இந்த ரோப் டாஸ்க்கில் ஷிவானி முதல் இடத்தை பிடித்ததன் மூலம் 32 புள்ளிகளில் இருந்த ஷிவானி 7 புள்ளிகளை பெற்று 39 புள்ளிகளை எடுத்துள்ளார். எனவே, டிக்கெட் டு பினாலே டாஸ்கில் சோம் சேகர் 39 புள்ளிகளுடன் முதல் இடத்தையும் ரியோ 40 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் 39 புள்ளிகளுடன் ஷிவானி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார் இந்த டாஸ்க்கின் இறுதி இடத்தில் 27 புள்ளிகளுடன் ஆரி இறுதி இடத்தை பிடித்துள்ளார்.

ஒருவேளை நேற்று ரியோ 7 புள்ளிகளை பெற்று இருந்தால் அவருக்கு வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும். அனால், நேற்று சோம்க்கு முன்பாகவே ரியோ டாக்ஸை முடித்து 3 புள்ளிகளை எடுத்தார். ஆக, அவர் தற்போது 40 புள்ளிகள் தான். நேற்றய 7 ஆம் டாஸ்க் முடிவின்படி சோம் சேகர் தான் 39 புள்ளிகளுடன் முதல் இடம் வகித்து வந்தார். நேற்றய இறுதி டாஸ்கில் சோம் 4வது டாஸ்கை விட்டதால் அவருக்கு 4 மதிப்பேன் எனவே, அவர் 43 புள்ளிகளை எடுத்துள்ளார்.எனவே, வெறும் 2 புள்ளிகளில் டிக்கட் டு பின்னாலே வாய்ப்பை தவறவிட்டுள்ளார் ரியோ.

Advertisement
Advertisement