அட, ரஜினி மகளின் இரண்டாம் கணவருக்கும் பிக் பாஸ் சிபிக்கும் இப்படி ஒரு உறவா.

By Rajkumar · 8/10/2021

7அனைவரும் எதிர் பார்த்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி தற்போது நான்கு நாட்களை கடந்து உள்ளது. கடந்த சீசன்களை விட இந்த முறை நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி இருக்கின்றனர். இந்த முறை 18 போட்டியாளர்கள் நிகழ்ச்சி ஆரம்பத்தில் கலந்து உள்ளார்கள். முதல் இரண்டு நாட்கள் சிரிப்பும், பாசமழை பொழிந்து கொண்டிருந்த பிக்பாஸில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சண்டை எட்டிப்பார்த்த தொடங்கியுள்ளது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகங்களை விட முகம் தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த முறை நிகழ்ச்சியில் மக்களுக்கு பிரபலமானவர்கள் என்றால் சில பிரபலங்கள் தான் இருக்கிறார்கள்.

அந்த வகையில் மக்களுக்கு பிரபலமான நபர் சிபி. நடிகர் சிபியை பற்றி தெரியாத சில விஷயங்களை இங்கு பார்க்கலாம். சிபி தென்காசியை சேர்ந்தவர். இவர் குடும்பம் எந்த ஒரு சினிமா பின்னணியும் கொண்டதில்லை. நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணத்தினால் சிபி தன்னுடைய விடாமுயற்சியினால் தற்போது இந்த இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த லவ் ஸ்டார்ட் பிலிம் இணையத்தில் செம வைரலானது. அதனைத் தொடர்ந்து தான் இவருக்கு மாடலிங், விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

இவர் விசாகன் நடித்த வஞ்சகர் உலகம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் இவருடைய நடிப்பு பாராட்ட கூடிய வகையில் இருந்தது. அதோடு விசாகன் யாரும் இல்லைங்க நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன். அதாவது ரஜினிகாந்த் அவர்களின் இளைய மகள் சௌந்தர்யாவின் கணவர் தான் விசாகன். மேலும், விசாகனின் நெருங்கிய நண்பர் தான் சிபி என்பது குறிப்பிடத்தக்கது. பின் அந்த படத்தை தொடர்ந்து சிபி பல ஷார்ட் பிலிம்களில் நடித்தார்.

அதன் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யின் மாணவனாக சிபி நடித்து வந்தார். மாஸ்டர் படத்தில் விஜயுடன் அதிக பயணம் செய்தது சிபி தான் என்று கூறலாம். விஜய்யை வைத்து கொண்டு கார் ஓட்டுவது, பைக்கில் கூட்டி செல்வது, வாத்தி கம்மிங் பாடலில் விஜய்யை தூக்குவது என சாந்தனுவை விட படத்தில் சிபி அதிகம் கவனம் பெற்று இருந்தார்.

இதன் மூலம் இவருக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிக பாராட்டுகள் கிடைத்தது. தற்போது சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் சிபி நடித்துள்ளார். தற்போது சிபி சினிமா உலகில் தனக்கென அடையாளத்தையும், ரசிகர்களையும் உருவாக்கிக்கொள்ள எண்ணித்தான் பிக் பாஸ் வீட்டில் நுழைந்து உள்ளார். மேலும், சிபிக்கு கோபம் நிறைய வரும். அதுதான் அவருக்கு பிளஸ்,மைனஸ் என்று அவர் நண்பர்கள் கூறி உள்ளார்கள். இந்த வாய்ப்பை சிபி கெட்டியாக பிடிப்பரா? இல்லையா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கணும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full